3.5.06

திங்கள் மாலை வெண்குடையான்

படம் : கரும்பு
குரல் : சுசீலா
பாடல் : இளங்கோ அடிகள்
இசை : சலீல் சௌத்ரி


பாடலைக் கேட்க இங்கே

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அது ஓச்சி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி !
புலவாய் வாழி காவேரி !

கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய் !
மன்னும் மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி !

உழவர் ஓதை மதகோதை
உடை நீர் ஓதை தண்பதம் கொள்
விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி !
நடந்தாய் வாழி காவேரி !

விழவர் ஓதை திறந்தார்ப்ப
நடந்ததெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன் தன்
வளனே வாழி காவேரி !

15 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

chandravathana,

you can find this song in venkat's blog. also in dhool.com (from where venkat got the song).

this is one of my favourite song.

thanks for the lyrics.

G.Ragavan said...

சந்திரவதனா...இதை எங்கு பிடித்தீர்கள்...எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. ஈராயிரம் ஆண்டு பழைய பாடலுக்கு அதன் நயம் கெடாமல் இசையமைத்த சலீல் சௌத்திரி (இவர் ஒரு வங்காளி) அவர்களுக்கு நன்றி பல. மிகவும் இனிமையான நல்ல பாடல்.

கானா பிரபா said...

அருமையான பாடலை நயம்படத் தந்திருக்கிருக்கிறீர்கள்.

barathee|பாரதி said...

நான் இந்தப் பாடலைக் கேட்டதில்லை.. :( எங்காவது சுட்டி கிடைக்குமா?

மலைநாடான் said...

வணக்ககம் சந்திரவதனா!
மிக அருமையான பாடல். இதில் ஜேசுதாஸ் பாடும் பாடல் முன்பு அடிக்கடி இலங்கை வானொலியில் கேட்கலாம். ஆனால் இந்தப்பாடல் கேட்க முடிவதில்லை. அண்மையில் கானா பிரபா இட்ட பதிவொன்றுக்கு ராகவன் எழுதிய பின்னூட்டத்தில் இப்பாடலைக் குறிப் பிட்டிருந்தார். அதன்பின் பிரபா தந்த இணையச்சுட்டியில் கேட்டு மகிழ்ந்தேன். இங்கே பாரதிக்காக அதே சுட்டியைக் குறிப்பிடுகின்றேன்
http://www.dhool.com/sotd2/270.html
இச்சுட்டியில் பாடலைக் கேட்க மட்டுமே முடியும். தரவிறக்கம் செய்ய முடியாது.

barathee|பாரதி said...

மிக்க நன்றி மலைநாடன்.
rm வடிவில் உள்ளது. mp3ஆக மாற்றி இணையேற்றிவிட்டு, இதே பதிவில் பின்னூட்டம் போடுகிறேன்.

நன்றி.

Chandravathanaa said...

மதி, ராகவன், கானாபிரபா, பாரதி, மலைநாடான், பாரதி,
உங்கள் வரவுக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.

மதி
கூடவே தந்த தகவலுக்கும் நன்றி.

மலைநாடான்
தகவல்களோடு சுட்டியையும் தந்ததற்கு நன்றி.
மலைநாடான் தந்த சுட்டி


பாரதி
மிகவும் நன்றி.

கானா பிரபா said...

இதோ,
இந்தத் தளத்தில் mp3 வடிவில் இருக்கிறது, நீங்கள் download செய்யலாம்.

http://www.salilda.com/filmsongs/other/tamil/karumbu.asp

ஜெயஸ்ரீ said...

அருமையான பாடல். பாடல் வரிகளுக்கு மிக்க நன்றி சந்திரவதனா. பாடலுக்கு சுட்டி தந்த மலைநாடனுக்கும் நன்றி.

மலைநாடான் said...

சந்திரவதனா, ஜெயசிறி,பாரதி!
சுட்டிக்கான உங்கள் பாராட்டுக்கள் கானா பிரபாவுக்கு உரியது. புதிதாக mp3 சுட்டியும் தந்துவிட்டார். நன்றிபிராபா.
இணையவட்டத்தின் வரப்பிரசாதமே இதுதானே. அதைச்சரியாகப் பயன்படுத்தாவிட்டால், எமக்கெதற்கு இணையம்?

paarvai said...

இப்பாடல் சிலப்பதிகாரத்தில்; "கானல் வரி"ப் பாடல்கள் என்பதாகவும்;கோவலன் -மாதவி பிரிவுக்குக் காரணமானதெனவும் படித்ததாக ஞாபகம்; என் நினைப்புத் தவறாகவுமிருக்கலாம். எனினும் அழகிய தமிழைத் தந்ததற்கு நன்றி!!
யோகன்
பாரிஸ்

Venkat said...

சந்திரவதனா -

கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் வலைப்பதிவு எழுதத் தொடங்கி உருப்படியாக எழுதிய முதல் பதிவு இந்தப் பாடலைப் பற்றியதுதான். அதன் சுட்டி http://domesticatedonion.net/blog/?item=8

மதி - நான் தூள்.காம்-லிருந்து இதைப் பெறவில்லை. இதை எப்படித் தேடியெடுத்தேன் என்பதைப் பற்றித்தான் அந்தப் பதிவு. தூள்- இன்றைய பாடலை எழுதியதும் நான்தான்.

Chandravathanaa said...

கானாபிரபா,
சுட்டியைத் (http://www.salilda.com/filmsongs/other/tamil/karumbu)
தந்ததற்கு மகிவும் நன்றி.

ஜெயசிறீ
நீங்களும் பாடலை ரசித்ததில் எனக்கும் மகிழ்ச்சி.

மலைநாடான்
நீங்கள் சொல்வது மிகவும் சரி. இணையத்தின் பயனைச் சரியாகப் பயன் படுத்தினால்
அதன் பயனே தனி.

வெங்கட்,
சுட்டிக்கு
(http://domesticatedonion.net/blog/?item=8) நன்றி. படித்துப் பார்த்தேன்.
அழகாக உங்கள் உணர்வுகளைக் கலந்த எழுதியுள்ளீர்கள்.

யோகன்
தகவல்களைத் தந்ததற்கு மிகவும் நன்றி.
வெங்கட்டின் பதிவையும் வாசித்துப் பாருங்கள்.
(http://domesticatedonion.net/blog/?item=8)

Chandravathanaa said...

மீண்டும் கானாபிரபா தந்த சுட்டி
http://www.salilda.com/filmsongs/other/tamil/karumbu.asp

K. said...

1973 ல் உருவான இந்தப் பாடலை பள்ளியில் பயிலும்போது ஒலிபரப்பக்கேட்டு யேசுதாசின் அழகான குரலில் கிறங்கிப்போய் என்னுடைய பன்னிரண்டாவது வயதிலிருந்து மேலும் ஒரு முறையேனும் அதை மீண்டும் கேட்டு விட வேண்டும் என்ற துடிப்புடன் இத்தனைக் காலமும் காத்திருந்தேன்...கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்து. இறப்பதற்குள்ளாக அதை மீண்டும் கேட்டுவிட வேண்டும் என்ற உந்தலில் தேடலைத் தீவிரப்படுத்தியபோது இணையம் கைகொடுத்தது.நன்றி சந்திரவதனா. வார்த்தைகளில் என்னதான் உரைத்தாலும்... உணர்வை எப்படி வெளிப்படுத்த? மீண்டும் அந்த பாடலை அடையாளம் காட்டி என் சிறியவயது முதலான தேடலைத் தீர்த்து வைத்ததற்கு - நேரில் நீங்கள் இருந்தால் அழுதிருபபேனோ? நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
-யாக்ஞவல்கியன் மேட்டூர்அணை