28.4.06

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்...

படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான காதல் முடிவாகு முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலிவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

8 comments:

Sittukuruvi said...

"வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் "


மனசாட்சிய தொட்டு சொல்லுங்க இதை பெண்கள் தானெ அதிகம் செய்கிறீர்கள்.

செந்தில் குமரன் said...

உங்களின் பதிவுகளை முதன் முறையாக காண்கிறேன். பல பாடல்களின் வரிகளை தந்திருக்கிறீர்கள். இத்தோடு அந்த பாடல்களைப் பற்றிய பிண்ணணி அல்லது நீங்கள் அந்தப் பாடலைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்று கூறினால் இன்னும் சுவையாக இருக்கும்.

ENNAR said...

கரையேறி மீன் விளையாடும் காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவளனே வாழிய நீடு
இப்பொழுது முதலைஏறி வருகிறது. கரையோரம் எல்லாம் நாற்றம்.
காவேரி கரையிருக்கு கரைமேலே பூவிருக்கு

chandar said...

ஒரு சின்ன திருத்தம்

"அந்த கனிவான காதல் முடிவாகுமுன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்"

chandar said...

ஒரு சின்ன திருத்தம்

"அந்த கனிவான காதல் முடிவாகுமுன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்"

Chandravathanaa said...

மிகவும் நன்றி சந்தர்.
திருததுகிறேன்.

குமரன்
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
நீங்கள் சொல்வது போல நான் பல பாடல்களின் எனது பார்வைகளை எழுதியுள்ளேன்.
எல்லாம் இணையத்தில் இல்லை. சிலதை இங்கு நீங்குள் காணலாம். மிகுதியையும் நேரமுள்ள போது பதிய முயற்சிக்கிறேன்.

Chandravathanaa said...

சிட்டுக்குருவி,
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
பெண்கள் சீதனம் கேட்பதில்லை. ஆண்கள்தான் கேட்கிறார்கள்.
வளமான மங்கை பொருளோடு வந்ததும் காதலித்து மங்கையைக் கைவிட்ட ஆண்கள் அதிகம்.
பெண்களும் இருப்பார்கள். ஆனால் ஆண்களோடு ஒப்பிடும் போது அவர்கள் மிக சொற்பமான வீதத்தினரே.

Chandravathanaa said...

என்னார் உங்கள் கருத்துக்கும் நன்றி.
அருமையான பாடல் இது.