28.4.06

உன்னக் கண்டு நானாட

படம் : கல்யாணப் பரிசு
குரல் : சுசீலா
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
இசை : ஏ.எம்.ராஜா
நடிகை : சரோஜாதேவி


பாடல்

உன்னக் கண்டு நானாட
என்னைக் கண்டு நீ ஆட
உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
ஊரெங்கும் மகிழ்ந்து உல்லாசம் கலந்து
உறவாடும் நேரமடா...
உறவாடும் நேரமடா...

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா..

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
வேறேன்ன வேண்டுமடா...
வேறேன்ன வேண்டுமடா...

(உன்னைக்)

11 comments:

Bharaniru_balraj said...

எங்கேயிருந்து இவ்வளவு பழைய பாடல்களை தேடிப்பிடிகிறீர்கள்.

//உங்களுக்காக இரண்டு பாடல்கள் பதிவு செய்துள்ளேன்//

Bharaniru_balraj said...

ஒரு சின்ன சந்தேகத்தை விளக்குவீர்களா.

என்னுடைய இடுக்கைகள் யாவும் " அன்மையில் மறுமொழியபட்ட இடுக்கைகள்" பகுதியில் வருவதில்லை. இதற்காக தனியே ஏதும் பதிவு செய்ய வேண்டுமா.

Sivabalan said...

Nice One!!

Chandravathanaa said...

Bharaniru_balraj

பாடல்கள் இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள்தான். தந்ததற்கு மிகவும் நன்றி.

உங்கள் இடுகைகள் அண்மையில் மறுமொழியப் பட்ட இடுகைகள் பகுதியில் வருவதற்கு
நீங்கள் மறுமொழி மட்டுறுத்தல் செய்ய வேண்டும்.
உள்ளெ செற்றிங் பகுதியில் கொமென்ற்ஸ்சைக் கிளிக் பண்ணிப் பாருங்கள்.
அங்கே அதற்கான கேள்வி உண்டு. அதை ஆமோதியுங்கள்.

சிவபாலன்
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

barathee|பாரதி said...

எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று.. (ஒருமுறை பாடி மகிழ்ந்தேன்). "கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்" மற்றும் "மலரோடு விளையாடும் தென்றலே வாராய்" பாடல்கள் உங்களிடம் உண்டா? இருந்தால் தயவுசெய்து இற்றைப் படுத்துங்களேன்.

Chandravathanaa said...

பாரதி
உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.
அந்தப் பாடல்களைத் தர முயற்சிக்கிறேன்.

உங்கள் பதிவில் இருக்கும் நஞ்சுமரம் நல்ல பதிவு.
பின்னூட்டம் இட நினைத்தேன். அதற்கான வசதி அங்கு இல்லை.

Chandravathanaa said...

பாரதி
பின்னூட்டத்துக்கான வசதியைக் கண்டு கொண்டேன்.
சேர்த்து வேறு பதிவுகளும் இருந்ததால் முதலில் சரியாகப் பார்க்கத் தவறி விட்டேன்.

நீங்கள் கேட்ட பாடல்களில் ஒன்றான
கலையே என் வாழ்கையில்.. பாடல் இங்கே

Bharateeyamodernprince said...

1983ல் நான் ஆறாவது வகுப்பில் படிக்கும்போது தூர்தர்ஷனில் பார்த்தது. 1959 வெளியான படம். ஜெமினி கணேசன், சரோஜாதேவி, விஜயகுமாரி நடித்த காதல் காவியம். முக்கோணக் காதல் கதைதான். இணையாமல் போகும் காதலர்களது பிரிவின் சோகம் யாருடைய நெஞ்சைத்தான் தாக்காது?

“காதலிலே தோல்வியுற்றான் ...” பாடலின் சோகத்திலும், “வாடிக்கை மறந்தது ஏனோ...”, “ஆசையினாலே மனம்...” பாடல்களின் குதூகலத்திலும் பட்டுக்கோட்டையாரி அமரத்துவ வரிகள் A.M. ராஜாவின் மெல்லிசை யில் இழையோடிவருகிறது.

உயிருக்கு உயிராகக் காதலித்தக் காதலனைத்தான் வேறொரு பெண்ணிடம் (சொந்த சகோதரியிடம்தான்) இழந்துவிட்டாள்; என்னே அவள் தியாகம்! இனி வேறென்ன செய்வாள்...இனி அவளிற்கு என்ன வேண்டும் இவ்வுலகில்......தீபாவளி தின குதூகல வைபவத்தில், காதலனின் குழந்தையைக் கொஞ்சும் போது, தன் எதிர்கால எதிபார்ப்பை வெளிப்படுத்துகிறாளோ......“எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்,
எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்?
வல்லமை சேர நல்லவனாக
வளர்ந்தாலே போதுமடா..
வளர்ந்தாலே போதுமடா....”

`அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவிக்கு இதேபோலொரு பாத்திரப் படைப்பில் ஒரு படம் பின்னாளில் வாய்த்தது. `தாமரை நெஞ்சம்’ அது.

இன்று ஷங்கர் படம், மணிரத்னம் படம் என்றெல்லாம் சொல்கிறோமே, இயக்குநர் பெயரால் ஒரு படம் அடையாளம் காணப்படும் நிலையைத் துவக்கி வைத்தவர் ஸ்ரீதர்தான் என்று ஆணித்தரமாகச் சொல்வேன். அதுவும் மிகவும் இளம் வயதில் அவர் இயக்கிய படம் இந்தக் கல்யாணப் பரிசு.

இப்படத்தின் மற்றொரு சிறப்பம்சம், தங்கவேலுவின் காமெடி ட்ராக்...`மன்னார் அன் கோ!’ மறக்கமுடியாத ஒன்று...

Chandravathanaa said...

மிகவும் நன்றி வெங்கடேஷ் வரதராஜன்.
நிறையத் தகவல்களைத் தந்துள்ளீர்கள்.
இந்த மன்னார் அன் கோ முன்னர் நல்ல பிரபல்யம்.
நானும் ரசித்தேன்.

மாசிலா said...

மிக அருமையான பாடல் சந்திரவதனா. பழைய நினைவுகள் துளிர் விட்டெழுந்தன. அதில் ஒரு ஆத்ம இன்பம்.
பகிர்ந்தமைக்கு நன்றி.
உங்கள் உழைப்பிற்கும் நன்றி.

Chandravathanaa said...

நன்றி மாசிலா