25.4.06

பாட வந்ததோ கானம்

படம்: இளமைக் காலங்கள்
பாடியவர்கள்: பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா
நடிப்பு: மோகன், சசிகலா


சுசீலா:
லா லா லா லல்ல லா
லலலா லலலா

குழுவினர்:
தாரத்தத்தத்த தாரத்தத்த
தரத்த தாரரா

சுசீலா:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை விழ

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

குழுவினர்:
லா லாலா ....

ஜேசுதாஸ்:
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
ராஜமாலை தோள் சேரும்
நாணமென்னும் தேனூறும்
கண்ணில் குளிர் காலம்
நெஞ்சில் வெயில் காலம்

சுசீலா:
அன்பே என்னாளும் நான் உந்தன் தோழி
பண் பாடி கண் மூடி
உனது மடியில் உறங்கும் ஒரு கிளி

ஜேசுதாஸ்:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
லாலல் லாலா லாலா
லாலல் லால லா லாலா

குழுவினர்:
லா லா லா லா லா லா.....

சுசீலா:
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
மூடிவைத்த பூந்தோப்பு
காலம் யாவும் நீ காப்பு
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது
இதயம் உறங்காது
இமைகள் இறங்காது

ஜேசுதாஸ்:
தேனே தேனே
கங்கைக்கு ஏனிந்த தாகம்
உல்லாசம் உள்ளூறும் நதிகள்
விரைந்தால் கடலும் வழி விடும்

சுசீலா:
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்

ஜேசுதாஸ்:
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை விழ

குழுவினர்:
லால லால் லா லா லா
லால லலல்லாலா லா

சுசீலா: லால லலல்லாலா லா
லலலால் லாலாலா

3 comments:

Bharateeyamodernprince said...

கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள்...என மணிவண்ணன் மோகனை வைத்து எடுத்த படவரிசையில் வரும் `இளமைக் காலங்கள்' படத்தில் முதல் ரக ஹிட் ஸாங், `ஈரமான ரோஜாவே, என்னைப்பார்த்து மூடாதே..' என்றாலும், எனக்கு ரொம்பப் பிடித்த பாடலென்னவோ `பாடவந்ததோ கானம்....'தான்.

சசிகலாவின் வசீகரமான தோற்றமும், கள்ளம்கபடமற்ற புன்னகையும் மறக்கமுடியாதவை.


இது தவிர, `ராகவனே, ரமணா ரகுநாதா...' பாடலும் என்னைக் கவர்ந்த ஒன்று. `படிப்புல் ஹீரோ, நடிப்பில ஜீரோ....' பாடலை ஷைலஜாவின் குரலுக்காக ரசிக்கலாம்.

Chandravathanaa said...

நிறையத் தகவல்களை அறிந்து வைத்திருக்கிறீர்கள்.
என்னோடும் பகிர்ந்து கொள்வதற்கு மிகவும் நன்றி.

Murali said...

பாடவந்ததோ கானம்.... பாடல்களின் விபரம் ஆங்கில KEY WORDல் இணையதள தேடலில் நமது தோழர்கள் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை, தங்களின் blogல் உள்ள விவரங்கள் நிறைய நண்பர்களுக்கு பயன்படும் என நம்புகிறேன். குறிப்பாக இது மிகவும் பிரசித்து பெற்ற பாடல் எனவே தகவல் அளித்தமைக்கு நன்றி!