27.10.05

கனாக் காணும் காலங்கள்

பாடியவர்:மதுமிதா
இசை: யுவன் ஷங்கர் ராஜா
வரிகள்: நா முத்து

கனாக் காணும் காலங்கள்
கரைந்தோடும் நேரங்கள்
கலையாது கோலம் போடுமா

விழி போடும் கடிதங்கள்
வழி மாறும் பயணங்கள்
தனியாக ஓடம் போகுமா

இது இடைவெளி குறைகிற தருணம்
இரு இதயத்தில் மெல்லிய சலனம்
இனி இரவுகள் இன்னொரு நரகம்
இளமையின் அதிசயம்

இது கத்தியில் நடந்திடும் பருவம்
தினம் கனவினில் அவரவர் உருவம்
சுடும் நெருப்பினை விரல்களும் விரும்பும்
கடவுளின் ரகசியம்

உலகில் மிக இனித்திடும் பாஷை
இதயம் இரண்டு பேசிடும் பாஷை
மெதுவாய் இனி மழை வரும் ஓசை...

நனையாத காலுக்கெல்லாம் கடலோடு உறவில்லை
நான் வேறு நீ வேறென்றால் நட்பு என்று பெயரில்லை
பறக்காத பறவைக்கெல்லாம் பறவையென்று பெயரில்லை
திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை

தனிமையில் கால்கள் எதைத் தேடிப் போகிறதோ?
திரி தூண்டி போன விரல் தேடி அலைகிறதோ?

தாயோடும் சில தயக்கங்கள் இருக்கும்
தோழமையில் அது கிடையாதே
தாவி வந்து சில விருப்பங்கள் குதிக்கும்
தடுத்திடவே இங்கு வழியில்லையே....

இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே
ஏகாந்தம் பூசிக் கொண்டு அந்திவேளை அழைக்கிறதே
அதிகாலை நேரம் எல்லாம் தூங்காமல் விடிகிறதே
விழி மூடி தனக்குள் பேசும் மௌனங்கள் பிடிக்கிறதே

நடைபாதை கடையில் உன் பெயர் படித்தால்
நெஞ்சுக்குள் ஏனோ மயக்கங்கள் பிறக்கும்
படபடப்பாய் சில கோபங்கள் தோன்றும்
பனித்துளியாய் அது மறைவது ஏன்
நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை
மன நடுக்கம் அது மிகக் கொடுமை

4 comments:

Sud Gopal said...

Keetkum pothellam kannil niirinai varavazaikkum paadal ithu.

nalla theervu.naRi akka.

Sud Gopal said...

"naRi akka"
mannikkavum.athu nanRi akka.

அன்பு said...

அருமையான பாடலகளாய் கொடுக்கின்றீர்கள். பாடலை பலமுறைக்கேட்டிருந்தாலும், இங்கு மனதுள் வாசித்து/பாடுவதில் இன்னும் இனிமை, மென்மை.

மீண்டும் நன்றி.

Chandravathanaa said...

நன்றி அன்பு.
நன்றி சுதர்சன்