14.9.05

வீடுவரை உறவு வீதி வரை மனைவி

இப்பாடலும் தருமிக்காக

படம் - பாதகாணிக்கை
வரிகள் - கண்ணதாசன்.

ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?

திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்

கூடவே வருவதென்ன...?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?

(வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி!

(வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்!

(வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு!

(வீடு)

7 comments:

தருமி said...

சும்மா சொல்லக்கூடாது'ங்க. வலைஞர்கள் சார்பாக உங்களுக்கு " READY RECKONER" என்ற பட்டத்தை அளிக்கின்றேன்!!

நன்றி........

வீ. எம் said...

//
வலைஞர்கள் சார்பாக உங்களுக்கு " READY RECKONER" என்ற பட்டத்தை அளிக்கின்றேன்!!//

தருமி,
இப்படி வலைஞர்கள் சார்பாக நீங்கள் அக்காவிற்கு ஆங்கிலத்தில் பட்டம் கொடுத்தை கண்டிக்கிறேன்:) ..தமிழில் அல்லவா பட்டம் கொடுத்திருக்கவேண்டும்.. தமிழ் பற்று இல்லாம இப்படி இருக்கீங்களே.. என்ன பன்றது உங்களை..
உடனடியாக இந்த பட்டத்தை தமிழில் மொழிப்பெயர்த்து "ரெடி ரெக்கனர்" என்று தமிழில் பட்டம் கொடுக்கவும்.. இல்லை விளைவுகள் விபரீதமாகிவிடும்.. :)

Chandravathanaa said...

நன்றி தருமி
நன்றி வீ. எம்

தருமி said...

வீ.எம். - ஏனையா இப்படித் தமிழைக் கொலை பண்ணுகிறீர்; அது 'ரெடி ரெக்கனர்' இல்லை, ஐயா. அதை 'இரெடி இரெக்கனர்' என்றல்லவா சொல்லவேண்டும்! அதுவும் இதற்குப் பெண்பாலில் என்னவென்று யாரிடமாவது கேட்டுச் சொல்லுங்கள். பட்டத்தைப்
'போஸ்டர்' அடித்துக் கொடுத்து விடுவோம். (காசா, பணமா?)

அதுசரி, நம்ம விவாதத்தை இங்கே வச்சிக்கிட்டா ப்ளாக்காரங்களுக்கு இடைஞ்சல் இல்லியா? கோவிச்சுக்க மாட்டாங்களே?

தருமி said...

"வேதனைகள், ஏமாற்றங்கள் வரும்போது
நம்மைத் தாங்க ஒரு தோள் வேண்டுமென
நினைக்காதார் யார்? மேற்சொன்னமாதிரி
நேரங்களில், மனிதத் தோள்கள் ஆறுதல்
கொடுக்கமுடியாத நேரங்களிலும் நாம்
முழுமையாகச் சரணடைய ஒரு 'இடம்'
வேண்டும்.(கண்ணதாசனின் பாடல்
வரிகள் நினைவுக்கு வருகின்றன_"

-இதை என் பதிவில் எழுதும்போது உடனே நீங்கள்தான் நினைவுக்கு வந்தீர்கள். அந்த 'புதிய பறவை'யில் கண்ணதாசனின் 'எங்கே நிம்மதி' பாடல் என் அடுத்த நேயர் விருப்பம். வரிகளை அங்கே சேர்த்து விடுகிறேன்.
நன்றி.

Chandravathanaa said...

இதோ உங்கள் விருப்பப் பாடல்

Unknown said...

என்ன ஒரு தத்துவம்