14.9.05

சட்டி சுட்டதடா கை விட்டதடா

தருமியின் விருப்பத்துக்கு

படம் - ஆலயமணி
இசை - விஸ்வநாதன் இராமமூர்த்தி
குரல் - சௌந்தரராஜன்
வரிகள் - கண்ணதாசன்


சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா

9 comments:

Dharumi said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோ, இவ்வ்வ்வளவு உடனேயா! எல்லாம் மனப் பாடங்களா; இல்லை, பாட்டுப்புத்தகங்களா?

மிக்க நன்றி'ங்க.

இன்னொரு விருப்பம்: வீடு வரை உறவு...

kirukan said...

Dharumi.... if you ask more songs, it will become a paid service...... careful

kirukan said...

Read a Smiley ;-) after my last comments

Dharumi said...

ஹலோ எனக்கு முன் பின்னூட்டம் இட்டவரே (பாருங்கள், சுருக்கமா, ஹலோ கிறுக்கனே என்றா உங்களை அழைக்க முடிகிறது??) உங்கள் ஸ்மைலி இல்லாமலே சிரித்துக்கொண்டேன் !

Chandravathanaa said...

எல்லாம் மனப் பாடங்களா; இல்லை, பாட்டுப்புத்தகங்களா?

பாட்டுப் புத்தகங்கள் எதுவும் வீட்டில் இல்லை.
பிடித்த பாடல்கள் வானலையில் வந்தால் எழுதி வைப்பேன்.
அதே போல இணையத்தில் கிடைத்தாலும் சேகரித்து வைப்பேன்.
பல பாடல்கள் மனப்பாடமாயுமுள்ளன.

Dharumi said...

"பல பாடல்கள் மனப்பாடமாயுமுள்ளன"
- இந்த மாதிரி ஆட்களைப் பார்த்தாலே எனக்குப் பயமுங்க! நம்மால முடியாத விதயங்களில் இது ஒன்று'ங்க!

Chandravathanaa said...

பயமா தருமி..?

சீனு said...

//"பல பாடல்கள் மனப்பாடமாயுமுள்ளன" //
நானும் உங்களாஇப் போலதானுங்க (பந்தாவா சொல்லலை). நான் பெரும்பாலும் வரிகளுக்காக பாடலை கேட்பவன்.

இதைப் போல பக்கங்களை நான் ஆரம்பிக்கவேண்டும் என்று நினைத்ததுண்டு (இந்த பக்கங்களைக் காணும் வரை). இப்போ தான் நம்ம அக்கா சந்திரவதனா இருக்காங்களே, அப்புறம் ஏன் நேரத்தை செலவழிக்கனும்.

Chandravathanaa said...

நன்றி சீனு.