2.8.05

அத்திக்காய் காய் காய்

படம் - பலே பாண்டியா
பாடியவர் - ரி.எம்.சௌந்தரராஜன்+P.B.சிறீநீவாஸ்+பி.சுசீலா+ஜமுனா ராணி
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஷ்வநாதன்+ரி.ஆர்.ராமமூர்த்தி


அத்திக்காய் காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே
என்னைப்போல் பெண்ணல்லவோ!
என்னுயிரும் நீயல்லவோ..!

கன்னிக்காய் ஆசைக்காய்
காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய்
மங்கை எந்தன் கோவைக்காய்

மாதுளங்காய் ஆனாலும்
என்னுளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

இரவுக்காய் உறவுக்காய்
ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய்
நேரில் நிற்கும் இவளைக் காய்

உருவங்காய் ஆனாலும்
பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ

ஏலக்காய் வாசனைபோல்
எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல்
தனிமை இன்பம் கனியக்காய்

சொன்னதெல்லாம் விளங்காயோ
தூது வழங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே
என்னுயிரும் நீயல்லவோ..

உள்ளமெலாமிளகாயோ
ஒவ்வொரு பேச்சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல்
வெண்ணிலவே சிரிக்காயோ

கோதையென்னை காயாதே
கொற்றவரைக் காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே
தனிமையில் ஏங்காய் வெண்ணிலா

10 comments:

நெல்லையன் said...

இந்த பாடலில் பெண் குரல்களில் சுசீலாவுடன் ஜமுனா ராணியும் பாடுவார்.

Chandravathanaa said...

நெல்லையன்
தகவலுக்கு நன்றி

Dharumi said...

ஐயா கண்ணதாசா...

உன் ராஜாங்கமே ராஜாங்கம்..!

vishytheking said...

inRum ithupool yaaravathu oru paadal ezhutha mattargaLaa..

aasaithaan..

anbudan vichu
neyvelivichu.blogspot.com

Chandravathanaa said...

தருமி, விச்சு
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி

மாதங்கி said...

மிக அருமையாக எழுதப்பட்டும், இசையமைக்கப்பட்டும் பாடப்பட்ட பாடலின் வரிகளை இங்கு அளித்ததற்கு நன்றி சந்திரவதனா

வசந்தன்(Vasanthan) said...

//சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவளங்காய் வெண்ணிலா//


இவ்வரிகளை எழுதும்போது
"சொன்னதெல்லாம் விளங்காயோ
தூதுவங்காய் வெண்ணிலா"
என்று எழுதவேண்டும்.
துது வழங்க மாட்டாயா? என்ற பொருளில் வரவேண்டும்.

தூதுவளங்காயையும் வெளிப்படுத்த வேண்டும். தூதுவழங்காய் என்றும் கேட்கவேண்டும்.
சறுக்கிய ஒரே இடம் இதுதானென்று நினைக்கிறேன். எனினும் உச்சரிக்கும்போது இரு 'ள''ழ' கரங்களும் ஒரேமாதிரி வருவதால் பாடும்போது சிலேடை புரிகிறது.
எனினும் காய்களைக் காட்டிலும் மற்றைய பொருள்தான் முதன்மையென்பதால் எழுத்தில் தூதுவழங்காய் என்றே வரவேண்டும். அப்படித்தான் நான் எழுத்துவடிவிற் பார்த்த ஞாபகம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Chandravathanaa said...

மாதங்கி
உங்கள் வரவு கண்டு சந்தோசம்.

வசந்தன்
நீங்கள் சொல்வது சரிதான்.
குறித்துக் காட்டியதற்கு நன்றி.
மாற்றியுள்ளேன்

அரவிந்த் said...

இந்த பாடலின் முழு பொருளையும் யாரேனும் எனக்கு அனுப்ப முடியுமா..?

எனக்கு சில வரிகளின் பொருள் மட்டுமே புரிகிறது..