21.7.05

அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்

படம் - பூமகள் ஊர்வலம்
பாடியவர் - உன்னி கிருஷ்ணன்

வரிகள் - வைரமுத்து
இசை - சிவா


அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

சுடு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்.

பாடல் பற்றிய எனது கருத்து

4 comments:

Chandravathanaa said...

நன்றி mathan.

எனக்குப் பிடித்த பாடல்கள் ஓரளவு எனக்குப் பாடமாகி விடுவதால்
எழுத நினைக்கும் போது கஸ்டமில்லாமல் எழுத முடிகிறது.

Vetri Thirumalai said...

சந்திரவதனா ராம் என்ற படத்தில் மூன்று அருமையான பாடல்கள் இருக்கிறது. கேட்டீர்களா?

Chandravathanaa said...

வெற்றித்திருமலை
ராம் படத்தில் இடம் பெற்ற அந்த அருமையான பாடல்களைக் கேட்டேன்.
விரைவில் இங்கு அதை வரிவடிவத்தில் பதிகிறேன்.

உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

Unknown said...

chandravathana,
as if sun light gets reflected by a mirror, your words are, sun lights are truth about father and mother and you are a mirror.
Sridhar, China
alvatechs@gmail.com