இசை - இளையராஜா
படம் - அவதாரம்
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது
ஓடை நீரோடை
இந்த உலகம் அது போலை
ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போலை
நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் மனம் போலே
அழகெல்லாம் கோலம் போடுது
குயிலே குயிலினமே
அந்த இசையால் கூவுதம்மா
கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா
கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை
வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையிலே உள்ளது என்ன என்ன?
வண்ணங்கள் என்ன என்ன?
தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசிலை
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்பிலை

8 comments:
This is one of the great from Raja. It is in my 'always favourite' list.
- Suresh Kannan
கேக்கறப்பவெல்லாம் கண்ணில நீர் என்னை அறியாமலேயே வந்திடும்.
இந்தப் படத்தில வரும் எல்லாப் பாட்டையும் இளையராசா தான் பாடியிருப்பார்.
"ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது"
நிதர்சனமான வரிகள்...
ரொம்ப நன்றி அக்கா.
இந்தப் பாடல் மாதிரி பல பாடல்களை ஞயாபகப் படுத்திட்டு இருப்பதற்கு.
நன்றி சுரேஸ்கண்ணன்
மிக அமைதியான கருத்தான பாடல்.
எனக்கும் மிகவும் பிடிக்கும் பாடல்களில் ஒன்று.
நன்றி சுதர்சன்.
நீங்கள் குறிப்பிட்ட வரிகள் எனக்கும் பிடிக்கும்.
அப்படியே சேர்ந்து ஒருமுறை பாடிப்பார்த்தேன்... ஆஹா.. உடம்பெல்லாம் புல்லரிக்கிறது...
பாடலுக்கு நன்றி..
Chandra,
Wonderful song! Thanks for making me remember !!!
சுரேஸ் செல்வா, பாலா
உங்கள் வரவுகளுக்கும் பதிவுகளுக்கும் நன்றி.
///விவரம் இல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது///
ஆஹா, எத்தனை தடவை கேட்டாலும் மனதை வருடுகின்ற வரிகளும் பாடலும்!
ஞாபகப்படுத்தியதற்கு நன்றி வதனா!
யுவன்சங்கர் ஒரு பேட்டியில் 'அப்பாவின் இப்பாடலைப்போல எப்போது நான் போடுகிறேனோ அப்போதுதான் என்னை ஒரு மியூஸிக் டைரக்டர் என்று சொல்லிகொள்வேன்' என்று சொன்னார். அவ்வளவு அற்புதமான பாடலாம்.
எம்.கே.
உண்மைதான் எம்.கே.
எத்தனைதடவைகள் கேட்டாலும் மனதை வருடுகின்ற பாடல்.
Post a Comment