24.10.08

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

இது ஒரு ராகமாலிகை.ராகம்: சிவரஞ்சனி
தாளம்: ஆதி
இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி


பல்லவி
குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா


குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா


சரணம் 1
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி
சரணம் 2

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -
கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி
சரணம்-4

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்5
யாரும் மறுக்காத மலையப்பா

யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா- ராகமாலிகையில் அமைந்த பாடல் அதனால் அது பல ராகங்களின் கோர்வை ஸ்ரீரஞ்சனியும் அதில் ஒன்றாக இருக்கலாம். அதனால் இராகம் எனும் இடத்தில் இந்த ராகக் கோர்வையை தேடிப் போடவும். இல்லையேல் -இராகமாலிகை எனக் குறிப்பிடவும்.
எனக்கும் பிடித்த பாடல் இது...அதிலும் எம் எஸ் அம்மா கையில் தாளமும் வைத்து தட்டிப் பாடுவது முதல் தடவையாக இதில் பார்த்தேன்.
வயலின் வாசிக்கும் ஸ்ரீ ராம் குமார் இப்போ ஒரு தேர்ந்த முன்னணி வித்துவான். சமீபத்தில் பாரிஸ் வந்தார்.
அந்த கஞ்சிரா வாசிக்கும் பெண்...முதல் தடவையாக இதிலே தான் பார்த்தேன். நல்ல தேர்ச்சி..யு ருயூப்புக்கு
நன்றி கூறியே ஆகவேண்டும்.
கிடைக்காத காட்சியெல்லாம் காணவைக்கிறது.

K.Ravishankar said...

சந்திரவதனா,

பல்லவி,அனுபல்லவி,சரணம்1 இதன் ராகம் சிவ ரஞ்சனி சிறீரஞ்சனி அல்ல

தயவு செய்து திருத்தவும்.

Chandravathanaa said...

நன்றி யோகன்.
நன்றி ரவிசங்கர்

மெல்போர்ன் கமல் said...

...நல்ல முயற்சி.... மனதை வருடுகிறது எம்.எஸ். அம்மாவின் குரல்..நன்றி.

நகைச்சுவை-அரசர் said...

இது சினிமாப் பாடலா சந்திரா..?