17.10.07

இது ஒரு பொன்மாலைப் பொழுது

'நிழல்கள்' - 1980
வரிகள் - வைரமுத்து
குரல் - பாலசுப்ரமணியம்


பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது

வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்
கேள்விகளால் வேள்விகளை
நான் செய்வேன்!

(இது ஒரு பொன் மாலைப் பொழுது...)

6 comments:

Raghs | இராகவன் said...

ஹலோ சந்திரவதனா,

நன்றாக இருக்கிறது இந்த வலைப்பூ.

நானும் இதே போலவே ஒரு வலைப்பூ வைத்திருக்கிறேன். முடிந்தால் பார்வையிடுங்களேன்.

http://thiraippadap-paadal-varigal.blogspot.com/

தொடரட்டும் உங்கள் பணி.

வாழ்த்துக்கள்.
தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தப் பாடல் வைரமுத்துவை அடையாளம் காட்டிய பாடல், அழகான வர்ணனைகள். 'வேறு உடை பூணுகிறாள், கற்பனையின் உச்சம். எனக்குப் பிடித்த பாடல் கூட.
ஆனால் வைரமுத்து இப்போ இப்படி எல்லாம் எழுதுவதில்லை...கவலையே

Raghs | இராகவன் said...

//இந்தப் பாடல் வைரமுத்துவை அடையாளம் காட்டிய பாடல், அழகான வர்ணனைகள். 'வேறு உடை பூணுகிறாள், கற்பனையின் உச்சம். எனக்குப் பிடித்த பாடல் கூட.
//

நிச்சயம். சரியாகச் சொன்னீர்கள் யோகன். அது கண்டிப்பாக வைரமுத்துவுக்கு ஒரு தனி முத்திரை பதித்த பாடலாம். என் அப்பா சொல்லக் கேள்வி.

ஆயினும் அவர் பாடலின் தரம் தாழ்ந்து விடவில்லை என்பது என் கருத்து. தற்பொழுது உள்ள சூழ்நிலைக்குத் தகுந்தவாறு சற்றே வணிகமார்ர்க்கம் இடை புகுந்திருக்கின்றது அவ்வளவே.

cheena (சீனா) said...

வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒருநாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதிவரும்

உலகையே ஈர்த்த வரிகள் - வைரமுத்துவின் முத்தான வரிகள்

வித்யா கலைவாணி said...

சந்திரவதனா அக்கா! இது கவிஞர் வைரமுத்துவின் முதல் திரையுலகப் பாடல் தானே? ( வைரமுத்து எங்க ஊர்ல இருந்து 4 கி.மீ தூரம் தான்)

Anonymous said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்