படம் - மனதில் உறுதி வேண்டும்.
பாடியவர் – சித்ரா
நடித்தவர் - சுகாசினி
கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள் தானா
கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
சாத்திரங்கள் பெண் இனத்தை
மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும்
மீசை துடித்ததம்மா
சாத்திரங்கள் பெண் இனத்தை
மூடி மறைத்ததம்மா
அந்த ஆத்திரத்தில் பாரதிக்கும்
மீசை துடித்ததம்மா
வீடாளும் பெண்மை இங்கே
நாடாளும் காலம் வந்தும்
ஊமைகள் போலவே என்றும்
ஓயாமல் கண்ணீர் சிந்தும்
ஏனென்று கேட்கத்தான்
இப்போதும் ஆளில்லை
சமநீதி சேர்க்கின்ற
சட்டங்கள் ஏன் இல்லை
உலகமெல்லாம் விடிந்த பின்னும்
உங்களின் இரவுகள் விடியவில்லை
கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள்தானா
கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பாய் விரிக்கும் பாவை என்ன
காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு
காதல் அடிமைகளா
பாய் விரிக்கும் பாவை என்ன
காதல் பதுமைகளா
தினம் ஏவல் செய்ய ஆடவர்க்கு
காதல் அடிமைகளா
பொன் அள்ளி வைத்தால்தான்
பூமாலை தோளில் ஏறும்
இல்லாத ஏழையர்க்கெல்லாம்
பொல்லாத தனிமைக் கோலம்
எரிகின்ற நேரத்தில்
அணைக்கின்ற கையில்லை
சொல்கின்ற வார்த்தைகள்
ஒவ்வொன்றும் பொய்யில்லை
கனவுகளில் மிதந்த படி
கலங்குது மயங்குது பருவக்கொடி
கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
பெண் முன்னேற்றம் எல்லாம்
வெறும் பேச்சோடுதானா
பழம் பாட்டோடுதானா
அது ஏட்டோடுதானா
நாள் தோறும் பாடும்
ஊமைகள்தானா
கண்ணின் மணியே
கண்ணின் மணியே
போராட்டமா
உன் கண்களில் என்ன
கண்களில் என்ன
நீரோட்டமா
8 comments:
எனக்கு மிகப்பிடித்தமான பாடல்.
தந்தமைக்கு நன்றி.. :))
சென்ஷி
நன்றி சென்ஷி
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் ஏனோ "மயங்கினேன்; சொல்ல தயங்கினேன்; உன்னை விரும்பினேன் உயிரே..." பாடல் நினைவுக்கு வருகிறது.
சீனு
நீங்கள் குறிப்பிட்ட அந்த மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடலும் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்றுதான். முடிந்தால் அதையும் இங்கு தருகிறேன். வரவுக்கு நன்றி
ரொம்ப நல்ல பாட்டு!
Lyrics of the song is meaningful; Vairamuthu?
(sorry no tamil fonts now)
முதல் வரியைப் பார்த்திட்டு ஜெயராம் படப்பாடல் " கண்ணின் மணியே கண்ணின் மணியே கலங்கிட வேண்டாம்"என்ற பாடல் என்று நினைத்து விட்டேன்..இது கூட நல்ல பாட்டு நன்றி.
hi can u please send me or put up on ur blog the lyrics for the following films.. please do it as soon as possible many thanks! vee2710@hotmail.com
» Urchagam
» Karupasamy Kuthagaithaarar
» Parattai Engira Azhagu Sundharam
» Nenjai Thodu
» Madurai Veeran
» Thiru Ranga
» Nee Naan Nila
» Naan Avan Illai
» Maayakkannadi
» Kadhal Valarthen
» Aarya
» Muni
» Lee
» Sollitharava
» Maan
» Thirumagan [2007]
Post a Comment