11.5.07

அற்றைத் திங்கள் வானிடம்

திரைப்படம் : சிவப்பதிகாரம் (2006)
இசை : வித்யாசாகர்
இயக்கம் : கரு பழனியப்பன்
பாடியவர்கள் : மதுபாலகிருஷ்ணன,சுஜாதா
நடிப்பு : விஷால்,மம்தா மோகன்தாஸ்
இயற்றியவர் : யுகபாரதி
பெண்
அற்றைத் திங்கள் வானிடம்
ஆண்
அல்லிச் செண்டோ நீரிடம்
பெண்
சுற்றும் தென்றல் பூவிடம்
ஆண்
சொக்கும் ராகம் யாரிடம்
பெண்
காணுகின்ற காதல் என்னிடம்
ஆண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண்
அற்றைத் திங்கள் வானிடம்
பெண்
அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்
சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்
சொக்கும் ராகம் யாழிடம்
ஆண்
காணுகின்ற காதல் என்னிடம்
பெண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்


பெண்
அடிதொட முடிதொட ஆசை பெருகிட
நேரும் பலவித பரிபாஷை

ஆண்
பொடிபட பொடிபட நாணம் பொடிபட
கேட்கும் மனதினில் உயிரோசை

பெண்
முடிதொட முகந்தொட மோகம் முழுகிட
வேர்க்கும் முதுகினில் இதிகாசம்

ஆண்
உருகிட உருகிட ஏக்கம் உருகிட
கூடும் அனலிது குளிர் வீசும்

பெண்
குலுங்கினேன் உடல் கூசிட
கிறங்கினேன் விரல் மேய்ந்திட

ஆண்
மயங்கினேன் சுகம் சேர்ந்திட
தளும்பினேன் எனை நீ தொட
பாய்ந்திட ஆய்ந்திட

பெண்
காணுகின்ற காதல் என்னிடம்

ஆண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

ஆண்
அற்றைத் திங்கள் வானிடம்
பெண்
அல்லிச் செண்டோ நீரிடம்
ஆண்
சுற்றும் தென்றல் பூவிடம்
பெண்
சொக்கும் ராகம் யாழிடம்

ஆண்
உடலெது உடையெது தேடும் நிலையிது
காதல் கடலிது அடையாது

பெண்
இரவெது பகலெது தேங்கும் சுகமிது
சாகும் வரையிலும் முடியாது

ஆண்
கனவெது நினைவெது கேட்கும் பொழுதிது
காமப் பசி வர அடங்காது

பெண்
வலமெது இடமெது வாட்டும் கதையிது
தீண்டும் வரையிலும் விளங்காது

ஆண்
நடுங்காலம் குளிர்வாடையில்
அடங்கலாம் ஒரு ஆடையில்

பெண்
தயங்கலாம் இடைவேளையில்
உறங்கலாம் அதிகாலையில்
கூடலில் ஊடலில்

ஆண்
காணுகின்ற காதல் என்னிடம்

பெண்
நான் தேடுகின்ற யாவும் உன்னிடம்

10 comments:

rahini said...

nalla paadal enai kavartha paadalkalil ithuvum

nagai.s.balamurali said...

என் நட்பு உள்ளத்துக்கு பிடித்தமான பாடலை இங்கே கேட்க முடிந்ததற்கும்,வாசிக்க முடிந்ததற்கும் மிக்க நன்றி!

Chandravathanaa said...

ராகினி, பால முரளி
உங்கள் வரவுகளுக்கும் பதிவுக்கும் நன்றி.

சென்ஷி said...

தனிமடல் பிரசுரத்துக்கல்ல :-

//Chandravathanaa has left a new comment on your post "ஏமாந்த காதல்":

நல்லா இருக்கு //

இது என்ன பின்னூட்டத்துக்கு பதில் பின்னூட்டமா :)

சென்ஷி

rahini said...

அற்றைத் திங்கள் வானிடம்

ஆண்
அல்லிச் செண்டோ நீரிடம்

பெண்
சுற்றும் தென்றல் பூவிடம்

ஆண்
சொக்கும் ராகம் யாரிடம்


oru siriya keelvi ithil vaRuM vri onru yaal idama..? YAARIDAMA..?

rahini said...

அற்றைத் திங்கள் வானிடம்

ஆண்
அல்லிச் செண்டோ நீரிடம்

பெண்
சுற்றும் தென்றல் பூவிடம்

ஆண்
சொக்கும் ராகம் யாரிடம்

nalla varikal yaavum

rahini said...

இந்த பாடல் மறக்க முடியவில்லை
இதில் வரும் ஒரு வரி யாழிடமா? இல்லை யாரிடமா..?

Chandravathanaa said...

ராகினி,
கேட்கக் கேட்கத் திகட்டாத பாடல்தான் அது.

நீங்கள் குறிப்பிட்ட யாழிடம், யாரிடம் வார்த்தைகள் முதலில் என்னையும் குழப்பின. இப்போது மீண்டும் இப் பாடலைக் கேட்டுப் பார்த்தேன். முதலில் ஆண் பாடும் போது
யாரிடம் என்று கேட்பதாயும், பின்னர் பெண் பாடும் போது யாழிடம் என்று சொல்வதாயும் வருகிறதை அவதானித்தேன். அதைத் திருத்தியும் போட்டுள்ளேன்.

சந்தேகத்தை கேட்டு திருத்த உதவியதற்கு நன்றி.

VIKNESHWARAN said...

நல்ல பாடல்.. எனக்கு மிக பிடித்தமானது..

VIKNESHWARAN said...

//சொக்கும் ராகம் யாரிடம்//

சொக்கும் ராகம் யாழிடம்.