18.4.07

பேசா மடந்தையே விழி பேசும் சித்திரமே



வரிகள் - மது பாலகிருஸ்ணன்
இசை – வித்யாசாகர்
படம் - மொழி


பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

இதயம் என்னும் பூப் பறித்தேன்
நரம்பு கொண்டு சரம் தொடுத்தேன்
கையில் கொடுத்தேன் கண்ணே
நீ காலில் மிதித்தாய் பெண்ணே

பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே


ஏழு நிறங்களை எண்ணி முடிக்கு முன்
வானவில் கலைந்தது பாதியிலே
மறுபடி தோன்றுமா பார்வையிலே
பெண்ணின் மனநிலை கண்டு தெரியுமுன்
வாழ்க்கை முடிந்தது குழப்பத்திலே
வானம் நடுங்குது மயக்கத்திலே

காதலைச் சொல்லி கரங் குவித்தேன்
கண்ணுக்கு வலி என்று கலங்குகின்றாய்
பூஜைக்கு உனக்கு பூப் பறித்தேன்
பூக்களின் கொலை என்று நடுங்குகின்றாய்

வார்த்தைகளால் காதலித்தேன்
ஜாடைகளால் சாகடித்தாய்
மழை நான் கேட்டேன் பெண்ணே
இடி மின்னல் தந்தாய் கண்ணே

பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே


மூங்கில் காட்டிலே தீயும் அழகுதான்
ஆனால் அதை நான் ரசிக்கவில்லை.
ஐயோ இதயம் பொறுக்கவில்லை
கோபம் மூழ்கையில் நீயும் அழகுதான்
ஆனால் அதை நான் சுகிக்கவில்லை.
சகியே என் மனம் சகிக்கவில்லை.

உன் சினம் கண்டு என் இதயம்
உடம்புக்கு வெளியே துடிக்குதடி
உன் மனம் இரண்டாய் உடைந்ததென்று
என் மனம் நான்காய் உடைந்ததடி

விதை உடைந்தால் செடி முளைக்கும்
மனம் உடைந்தால் புல் முளைக்கும்
தண்டனை என்பது எளிது
உன் மௌனம் …… கொடிது

பேசா மடந்தையே
விழி பேசும் சித்திரமே
சேலைக் குழந்தையே
என் செல்லக் கலவரமே

1 comment:

Pandian R said...

மற்றுமொரு நல்ல பாடலின் வரிகளைத் தந்தைக்கு நன்றி.