படம்: பொன்னூஞ்சல்
பாடியவர்கள்: TMS+பி.சுசீலா
இசை: MSV
நடிப்பு: சிவாஜி+உஷா நந்தினி
TMS:
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
P.சுசீலா:
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
P.சுசீலா:
பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மணச் செம்பு கையேந்தி நாம் அங்கே போவோமா
பூச் சூடி புதுப் பட்டு நாம் சூடி
மலற்செண்டு கையேந்தி நாம் அங்கே போவோமா
மீனாளின் குங்குமத்தை
மீனாளின் குங்குமத்தை நானாள வேண்டுமம்மா
மானோடு நீராட மஞ்சள் கொண்டு செல்வோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
TMS:
பால் வண்ணம் பழத் தட்டு பூங்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
பால் வண்ணம் பழத் தட்டு பூக்கிண்ணம்
மணப் பெண்ணின் தாய் தந்த சீராகக் காண்போமா
ஊராரின் சன்னிதியில் ஒன்றாக வேண்டுமம்மா
தாய் என்றும் சேய் என்றும் தந்தை என்றும் ஆவோமா
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
சுசீலா:
கண்ணென்றும் வளை கொண்ட கையென்றும்
இவள் கொண்ட அங்கங்கள் நீ வாழும் இல்லங்கள்
TMS:
பொன் மாலை அந்தியிலே என் மாலை தேடி வரும்
அம்மா உன் பெண் உள்ளம் ராகம் சொல்லி ஆடி வரும்
TMS+ சுசீலா:
ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா
ஊர்கோலம் போவோமா உள்ளம் அங்கே ஓடுதமா
6 comments:
good songs
Nice one...
சந்திரவதனா!
நல்ல பாடல் ஒரு காலத்தில் ஈழத்தைக் கலக்கிய பாடல்!இந்த ஆரம்ப மென்டலின் இசைக்காகவே!!அந்த இசைச்சேர்க்கை சுமார் 3 தரம் ஒலிக்குமென நினைக்கிறேன்; மிக அருமை!!
அடுத்து...இதன் வரிகளில் மீனாவின் குங்குமதை என்றா மீனாளின் குங்குமத்தை என்றாவர வேண்டும்.
எனப் பார்க்கவும் கண்ணதாசன் மதுரை மீனாட்சியின் குங்குமத்தை நினைத்து; மீனாள் என எழுதச் சாத்தியம் அதிகம்.அத்துடன் அடுத்த சொல் "நானாள" என வருவதையும் கவனிக்க வேண்டும்.
பூக்கிண்ணமா? பூங்கிண்ணமா? அல்லது இரண்டும் பொருந்துமா?
அத்துடன் மணச் செம்பா? மலற்செண்டா?? பார்க்கவும்.மணச் செம்பென்பது என்ன??
திருமூர்த்தி, சீனு
நன்றி.
யோகன்
கருத்துக்களுக்கு நன்றி.
நீங்கள் குறிப்பிட்ட சொற்பதங்கள் சரியென்றே நினைக்கிறேன்.
பார்த்துத் திருத்துகிறேன்.
மிகவும் அருமையான பாடல். எனக்கும் மிகவும் பிடித்த பாடல். மெல்லிசை மன்னரின் சிறப்பான பாடல்.
யோகன் ஐயா சுட்டிக்காட்டியது போல "மீனாளின் குங்குமம்" "பால்வண்ணம் பழத்தட்டு பூக்கிண்ணம்" என்று வரவேண்டும்.
நல்லதொரு பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி சந்திரவதனா.
Akka! nice song. keep posting good songs like this.
thanks and cheers,
VV
Post a Comment