1.8.06

நிலவே என்னிடம் நெருங்காதே

பாடியவர் - பி.பி.சிறீனிவாஸ்
படம் - ராமு
நடித்தவர் - ஜெமினி கணேசன்


நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை..

கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
கோடையில் ஒரு நாள் மழை வரலாம்
என் கோலத்தில் இனிமேல் எழில் வருமோ
பாலையில் ஒரு நாள் கொடி வரலாம்
என் பார்வையில் இனிமேல் சுகம் வருமோ

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை

அமைதியில்லாத நேரத்திலே
அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன்
இந்த நிலையில் உன்னை ஏன் தூது விட்டான்

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான் இல்லை
மலரே என்னிடம் மயங்காதே
நீ மயங்கும் வகையில் நான் இல்லை

நிலவே என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்.... இல்லை...

3 comments:

ஞானவெட்டியான் said...

அன்புடையீர்,
இவ்வினிய பாடலைக் கேட்க:

http://iniyavaikal.blogspot.com/2006/09/7.html

Johan-Paris said...

ஐயா!
மிக இனிய பாடல்;மனைவியைப் பிரிந்த துயர் மாறாக் கணவன்;அடுத்து வாழ்வில் குறிக்கிடும் பெண்ணை;
இதமாகத் தவிர்க்கும்;பாடல். மிகரசிப்பேன் ;சிறீநிவாசின் குரலுக்காக .
யோகன் பாரிஸ்

Chandravathanaa said...

ஞானவெட்டியான்
மிகவும் நன்றி.

யோகன்
நன்றி