8.7.06

விண்ணோடும் முகிலோடும் விளையாடும்...

படம் : புதையல்
குரல் : சி.எஸ்.ஜெயராமன்+சுசீலா
பாடல் : மாயவநாதன்
இசை : வி-ரா
நடிகர்கள்: சிவாஜி+பத்மினி


விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணொடு கொஞ்சும்
கலை அழகே இசையமுதே..
இசையமுதே.....

(விண்ணோடும்)

அலைபாயும் கடலோரம்
இளமான்கள் போலே
விளையாடி.... இசைபாடி...
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த
சொர்க்க போகமே
ஓடோடி வந்த
சொர்க்க போகமே

காணத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

சங்கீதத் தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண
உள்ளம் நாடுதே

மங்காத தங்கம் இது
மாறாத வைரம் இது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே
விளையாடி.. இசைபாடி..
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்

(விண்ணோடும்)

6 comments:

VSK said...

சிவாஜி, பத்மினி, ஜயராமன், சுசீலா அனைவரையும் ஒரு கனம் கண் முன்னால் நிறுத்தி விட்டீர்கள்!
மிக்க நன்றி!
காலத்துக்கும் அழியாத பாட்டு!

அபுல் கலாம் ஆசாத் said...

இனிய சந்திரவதனா,

விண்ணோடும் முகிலோடும் பாடலாசிரியரின் பெயர் ஆத்மநாதன் என ஒலிப்பேழையில் பார்த்த நினைவு.

எதற்கும் ஒருமுறை சரிபார்த்துக்கொள்ளுங்களேன்.

இது வேறு செய்தி:
மாயவநாதன் நல்ல பாடலாசிரியர். 'காகித ஓடம் கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்' பாடலின் பல்லவியை ஹார்மோனியத்தில் வாசிக்கும்போது, யார் பாடல் எழுதுவது என்ற கேள்விக்கு, அதே மெட்டில் முதலில்,

'மாயவ நாஆதன் மாயவ நாஆதன்
மாயவ நாஆதன் மாயவ நாஆதன்' என்று பாடிக்காட்டினார்களாம்.

*

விண்ணோடும் முகிலோடும் எழுதியது
ஆத்மநாதனா மாயவநாதனா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ஆசாத்

Chandravathanaa said...

SK
கருத்துக்கு நன்றி.

யோகன்
தகவல்களுக்கு நன்றி.
இப்படி, சிவாஜிக்கு வேறு யாரும் குரல் கொடுத்த போது பொருந்தவில்லைப் போலத் தோன்றிய சந்தர்ப்பங்கள் எனக்கும் உண்டு.

எனக்கும் சி.எஸ்.ஜெயராமனின் பாடல்களைக் கேட்கப் பிடிக்கும். அவரது வித்தியாசமான குரல். அதே போல ஏ.எல்.ராகவனது குரலில் இன்னொரு அழகு.

ஒவ்வொரு பாடகனது குரலுக்குள்ளும் ஏதோ ஒன்று ஒழிந்திருக்கிறது. யார் சிறந்த பாடகன் என்று கேட்டால் சொல்ல முடியாத படிக்கு ஒவ்வொரு குரலுமே என்னைக் கட்டிப் போடுகின்றன.

Chandravathanaa said...

ஆசாத்,
தகவல்களுக்கு நள்றி.

ஆத்மநாதனா, மயவநாதனா என்பதை தேடிப் பார்க்கிறேன்.
தற்போது தேடிய போது ஒரு தளத்தில் ஆத்மநாதன் என்றே குறிப்பிட்டிருந்தார்கள்.

Anonymous said...

vanakkam,mikka nandri,paarattukkal arumaiyanaa padalkalin varigal padithu magilthen
era.eravi,editor www.kavimalar.com

Dr.Raja.Karthick said...

விண்ணோடும் முகிலோடும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயண கவி