9.5.06

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

இசை: வேதா
நடிகை: ஜெயலலிதா
படம்: யார் நீ
வருடம்: 1966
பாடல்: கவியரசு கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா


என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
உலகமே மாறி மாறி பார்க்கும்
போது மயக்கமேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

நேற்று வந்தேன் இன்று வந்தேன்
உன்னிடம் நாளை நான் வருவேன்
ஒரே நாளில் இங்கும் அங்கும்
உன் முகம் காண நான் வருவேன்
உன் பாதையிலே உன் பார்வையிலே
என் மேனி வலம் வரும் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?

துன்ப மழையில் நின்ற போது
கண்களில் உன்னை நான் கண்டேன்
அதே வழியில் அதே மழையில்
என் வாழ்வை காண செல்கின்றேன்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?
ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது
அழுவதேன் கண்ணா?

கால தேவன் வாசல் வழியே
போகிறேன் இன்று நீ யாரோ
போகும் வழியில் அன்பு முகத்தை
பார்க்கிறேன் நாளை நான் யாரோ
உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என்
நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்
என்னோடு அழுவதேன் கண்ணா?

6 comments:

paarvai said...

நிச வாழ்வில் வேதனை தரும் சோகம்; இலக்கியத்தில் வெகு சுவையானது; அதனால் சோகம் கூட இலக்கியச் சுவைகளில் ஒன்றானது.என் மிகவிருப்பமான பாடல்களில் ஒன்று.உணர்சியூட்டும் இசை; உருக்கமான குரல்; உன்னதமான வரிகள்; தயவு செய்து பாடலெழுதியவர் பெயரையும் கட்டாயம் குறிப்பிடவும்.
யோகன்
பாரிஸ்

Chandravathanaa said...

நன்றி யோகன்.
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.
பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார் எனத் தெரியவில்லை.
தெரிந்தவர்கள் யாராவது சொல்கிறார்களா எனப் பார்ப்போம்.

உங்கள் பக்கத்துக்குச் சில தடவைகள் சென்று பார்த்தேன்.
எந்தப் பதிவையும் காண முடியவில்லை.

paarvai said...

உண்மை சந்திரவதனா!
என் பக்கத்துக்கென்று, பெயர்தான் இருக்கும்;அதில் எதுவுமில்லை;இந்த கணனி விடயங்கள் நமக்கு சரிப்படவில்லை. எனினும் பின்னூட்டமிட ஒரு முகவரி- உங்கள் போல் கேட்கிறார்களே! அதனால் தக்கி முக்கித் தயாரித்தேன். அதற்கு மேல் எதுவும் செய்யத் தெரியவில்லை. ஆனால் என் கட்டுரை ஒன்று" தமிழ் மணத்தில்" உண்டு. ஈழத்தின் இசைவளர்ச்சியில் ;நாதஸ்வர தவில் கலைஞர் பங்கு"- இது 08-03 - 2006 அன்று, கூடல் எனும் திரு.குமரன் அவர்கள் வலைப் பதிவகத்தில்; இடம் பெற்றுள்ளது. சென்று படித்துக் கருத்துக் கூறுவீர்கள் என நம்புகிறேன். நீங்கள் ஈழத்தவரானதால் உங்கள் கணிப்பு எனக்குத் தேவை.வேறு கட்டுரைகளுமுண்டு. எப்படி இடுவதென்பது தெரியவில்லை. பார்ப்போம். ஒரு நாள் வரும்
யோகன்
பாரிஸ்

Chandravathanaa said...

நன்றி யோகன்.
உங்கள் கட்டுரையை எடுத்து வைத்திருக்கிறேன். ஒரு பகுதி வாசித்து விட்டேன்.
நேரப் பற்றாக்குறையில் முழுவதும் இன்னும் வாசித்து முடியவில்லை. முடிந்ததும் அது பற்றிக் கண்டிப்பாக எழுதுகிறேன்.

சேதுக்கரசி said...

வேறு யார்? கவியரசரே தான்!

படம்: யார் நீ
வருடம்: 1966
பாடல்: கவியரசு கண்ணதாசன்
குரல்: பி. சுசீலா
இசை: வேதா

பாடலைக் கேட்க:
http://www.musicindiaonline.com/l/26/s/movie_name.5700/year.31

Chandravathanaa said...

தகவல்களுக்கு நன்றி சேதுக்கரசி.
சேர்த்துக் கொள்கிறேன்