23.4.06

சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து

படம்: பிராப்தம்
பாடியவர்கள்: பி.சுசீலா - டி.எம்.சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: சிவாஜி, சாவித்திரி


டி.எம்.எஸ்:
ம்ம்ம் ம்ஹ¤ம்
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தழுவிக் கொண்டோடுது தென்னங் காற்று
தென்னங் காத்து
தென்னங் காற்று

டி.எம்.எஸ்:
ம்ஹ¤ம் காற்று இல்லே காத்து

சுசீலா :
தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

டி.எம்.எஸ்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

சுசீலா :
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து

இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

டி.எம்.எஸ்:
செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும்
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து

சுசீலா :
தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து
சிங்காரத் தோணிகள் பல்லாக்கு போல் வந்து
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

இருவரும்:
ஊர்கோலம் போவதும் நம்மைக் கேட்டு

டி.எம்.எஸ்:
ஓஹோஹோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

சுசீலா : ஓஓஓஓஓஓஓ

டி.எம்.எஸ்:
பன்னீரு பூச்சரம் பச்சைப் புல்லு மேடையில்
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக

சுசீலா :
பட்டுப் போல் கிடப்பதும் நமக்காக
தண்ணீரு ஓடையில் சல சல ஓசையில்
சங்கீதம் கேட்பதும் நமக்காக

இருவரும்:
சங்கீதம் கேட்பதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
மாமாவின் பொண்ணுக்கு ஆகாச மேகங்கள்
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு
சேலை கட்டிப் பாக்குது ஆசையோடு

டி.எம்.எஸ்:
நான் பார்க்கக் கூடாத பொல்லாத வானத்தில்
மாமன் மகள் போகுது நாணத்தோடு
மாமன் மகள் போகுது நாணத்தோடு

இருவரும்:
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து

சுசீலா :
நானாச்சி வாவென்று மீனாட்சி கோவிலில்
மணியோசை கேட்பதும் நமக்காக
மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சி என்றாலும் பூவாச்சும் வருமென்று
மீனாட்சி சொன்னதும் நமக்காக
மீனாட்சி சொன்னதும் நமக்காக
சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து
என்னைத் தடவிக் கொண்டோடுது தென்னங் காத்து
அந்தரத்திலே ரெண்டு பச்சைக் கிளிகள்
நல்ல ஆலோலம் பாடுது உன்னைப் பர்த்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
லாலா லலலலா

5 comments:

பரஞ்சோதி said...

சகோதரி,

இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்பவே பிடிக்கும், அடிக்கடி முணுமுணுப்பேன்.

Ram.K said...

இந்தப் பாடல் நான் பள்ளி செல்லும் நாட்களில் விவித்பாரதியில் அடிக்கடி போடுவார்கள். சாலையில் நடந்து செல்லும்போது இப்பாடலை உடன்பாடியபடியே பள்ளிக்குச் செல்வேன்.என் தமிழ் ஆசான் இந்தப் பாடலைப் பாடியபடியே இலக்கணம் சொல்லிக் கொடுப்பார். என்னைச் சிறுவனாக இன்று உணரச் செய்தமைக்கு நன்றி.

G.Ragavan said...

சந்திரவதனா...எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. கொஞ்சம் கஷ்டமான சங்கதிகள் நிரம்பிய பாடல் இது. ஆனாலும் கேட்க எவ்வளவு இதமாக இருக்கிறது. திரைப்பாடல் இலக்கணங்களை மீறிய பாடல்களில் இதுவும் ஒன்று.

Chandravathanaa said...

பரஞ்சோதி, பச்சோந்தி, இராகவன், யோகன்,

உங்கள் கருத்துக்களுக்கும், தகவல்களுக்கும் மிகவும் நன்றி.
எனக்கும் இப்பாடலை சின்ன வயதிலிருந்தே பிடிக்கும்.
காற்று இல்லை. காத்து. என்று சொல்லிக் கொடுக்கும் அழகை நான் மிகவும் ரசிப்பேன்.

யோகன்
என் நினைவில் இல்லாத தகவல்களையும் தந்துள்ளீர்கள்.
நன்றி

Oodam said...

எனக்கும் இந்த பாடல் பிடிக்கும்