12.4.06

விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்...

படம் - கிளிஞ்சல்கள்
வரிகள் -
இசை -
பாடியவர்கள் -

பாடல் ஒலி வடிவில் - http://www.dishant.com/jukebox/playsong.php3?albumid=3562&songid=24441

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You

July i love You

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மை தடவும் விழியோரம்
மோகனமாய் தினம் ஆடும்
மயக்கம் தரும்
மன்னவனின் திருவுருவம்

மனவீணை என நாதமீட்டி
கீதமாகி நீந்துகின்ற தலைவா
இதழோடையிலே வார்த்தையென்னும்
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..

July i love You
July i love You

நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

உன் நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே

ஒரு மாலையிலே மஞ்சள் வெயில் போல வந்து
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க

விழிகள் மேடையாம்
இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம்

அரங்கில் ஏறுதாம்
ஓ.. ஓ.. ஓஓ..


July i love You

July i love You

15 comments:

G.Ragavan said...

இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். மிகவும் அருமையான பாடல்.

Chandravathanaa said...

எனக்கும் பிடிக்கிறது ராகவன்.
கேட்கக் கேட்கத் திகட்டாத பாடலாக இருக்கிறது.
மனதைக் கிறங்க வைப்பது போன்ற குரல்+இசை+மெட்டுக் கலந்த பாடல் வரிகள்.

Dr.Srishiv said...

அருமையான பாடல் , அற்புதமான வரிகள், என் பள்ளி இறுதி நாட்களில் நான் ரசித்துக்கேட்ட பாடல் வரிகள் இவை, மீண்டும் நினைவிற்கு கொண்டுவந்து மலரும் நினைவுகளாக்கியமைக்கு நன்றியம்மா..:)
ஸ்ரீஷிவ்..:)

-/பெயரிலி. said...

பயணங்கள் முடிவதில்லை வெற்றியின்பின்னால், மோகன் - பூர்ணிமா நடிக்க அதே பாணியிலே வந்த படம். இதுவும் வாழ்வேமாயம் படமும் ஒரே சமயத்திலே (விழ்யமாக) வந்திருந்தன. பாடல்கள் வாழ்வேமாயத்திலும் படமுடிவு கிளிஞ்சல்களிலும் பிடித்திருந்தன (ஸ்ரீதேவியைப் பிடிக்காததும் ஒரு காரணமெனலாம்). ஆனால், இப்பாடல் பிடித்துக்கொண்டது (ஜூலி ஐ லவ் யூ என்ற வரிகள் ஒலிக்கும் விதத்துக்காக). இதே சமயத்திலே மோகனின் இளமைக்காலங்கள், வசந்த்-பானுப்ரியாவின் மெல்லப்பேசுங்கள், இளவரசியின் கொக்கரக்கோ, கார்த்திக்-சுலக்ஸ்ணாவின் ஆயிரம்நிலவேவா ஆகியனவும் வந்திருந்ததாக ஞாபகம்.

Chandravathanaa said...

srishiv
உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.
உங்கள் மலரும் நினைவுகளை மீட்ட முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி.

பெயரிலி.
கருத்துக்களுக்கும், அந்த நேரத்துப் படங்கள் சிலதை நினைப்பூட்டியதற்கும் நன்றி.
கிளிஞ்சல்கள் படக் கதையை முற்றாக மறந்து விட்டேன். பயணங்கள் முடிவதில்லை ஓரளவு ஞாபகம்.
சிறீதேவியைப் பிடிக்காதா? ஆச்சரியமாக இருக்கிறது. இரசனைகள் பலவிதம்.

பாரதிய நவீன இளவரசன் said...

‘பசி’ தந்த இயக்குனர் துரையின் அருமையானதொரு இயக்கத்தில் வந்த படம் கிளிஞ்கல்கள்...நான் நான்காவது படிக்கும்போது வெளியானது. இதே காலகட்டத்தில் வந்த `அலைகள் ஓய்வதில்லை’, அதற்கும் முன்னரே வந்த `ராஜநாகம்’ போல ஒரு கிருத்துவப் பெண்ணும் இந்துப் பையனுக்கும் இடையிலான காதல் தான் கதை. சென்னையில் ஒரு திரையரங்கில் கிட்டத்தட்ட 300 நாட்கள் ஓடியது. கல்லூரி மாணவமாணவியர் மத்தியில் பிரபலமான இந்தப் படத்திற்குப் பிறகு, மோகன்-பூர்ணிமா ஜோடிக்குப் பல படங்கள் கிட்டியது. படத்தின் சோக முடிவையே நிஜவாழ்விலும் ஒரு இள நங்கை எடுத்த துரதிருஷ்டமான செய்தியை அப்போதைய நாளிதழ்களிலும் வாரப்பத்திரிக்கைகளிலும் கண்டதாக நினைவு.

"நினைவென்னும் காற்றினிலே
மனமென்னும் கதவாட
தென்றலென வருகை தரும் கனவுகளே...". இரயில் பயணங்களில், ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஓர் ராகம்... டி.ராஜேந்தரின் பொற்காலம் அது!

Oodam said...

அருமையான பாடல்

Bharaniru_balraj said...

சந்திரவதனா அவர்களே,

இந்த பாடலையும் உங்கள் சேமிப்பில் பாதுகாக்கவும்.

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.

ஆண்:
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனெமென்ன
அன்பு காணிக்கைதான் கண்னே
பெண்:
கற்பணையில் வரும் கதைகளிலே நான்
கேடடதுண்டு கண்ணா என் காதலுக்கே வரும்
காணிக்கை என்று நினைத்ததில்லை கண்ணா

ஆண்:
தேர் போலெ ஒரு பொன்னூஞல்
அதில் தேவதை போலெ நீயாட

பெண்:
பூவாடை வரும் மேனியிலே உன்
புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:
கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தில் மீதே கோலமிட

பெண்:
கைவளையும் மெய்வளையும்
கட்டியணைத்தே கவி பாட (மயக்க)


ஆண்:
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:
உன்னையள்ளால் ஒரு பெண்னையினி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

பெண்:
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)

Bharaniru_balraj said...

சுகமான ராகத்தை பதிவு செய்திருக்கிறீர்கள்.

Chandravathanaa said...

வெங்கடேஸ்,
கருத்துக்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

வில்லண்டம்,
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

பால்ராஜ்
அந்தப் பாடலைத் தந்ததற்கு மிகவும் நன்றி.
பதிந்து விட்டேன்.

TSK said...
This comment has been removed by the author.
TSK said...

இந்த பாடலுக்காகவே இந்தப் படத்தை பல முறை பார்த்தேன்.
படத்தில் டைட்டிலில் வரும் காதல் பற்றி விளக்கம், & பாடல் காட்சிகள் அற்புதம்.... <3
படமே சூப்பர். (Y)

TSK said...

படம்:- "கிளிஞ்சல்கள்" - 21st Dec' 1981;
இசை & வரிகள்:- T.ராஜேந்தர் (TR);
பாடியவர்கள்:- S.ஜானகி & டாக்டர் கல்யாணம்;
நடிப்பு:- மோகன் & பூர்ணிமா.

TSK said...

படம்:- "கிளிஞ்சல்கள்" - 21st Dec' 1981;
இசை & வரிகள்:- T.ராஜேந்தர் (TR);
பாடியவர்கள்:- S.ஜானகி & டாக்டர் கல்யாணம்;
நடிப்பு:- மோகன் & பூர்ணிமா.

TSK said...

Pl correct the line...as follows..pl.

மது மாலையிலே மஞ்சள் வெயில் போல என  
நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென
உள்ளமதில் நீ பொங்க