22.4.06

மயக்கமென்ன இந்த மௌனமென்ன

படம்: வசந்த மாளிகை
இசை: கே வி மகாதேவன்
பாடல்: கண்ணதாசன்.


http://ww.smashits.com/redirect.cfm?ID=11&TrackID=29206

ஆண்:
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே

மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே

பெண்:
கற்பனையில் வரும் கதைகளிலே
நான் கேடடதுண்டு கண்ணா
என் காதலுக்கே வரும் காணிக்கை என்றே
நினைத்ததில்லை கண்ணா

ஆண்:
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் - அதில்
தேவதை போலே நீயாட

பெண்:
பூவாடை வரும் மேனியிலே உன்
புன்னகை இதழ்கள் விளையாட

ஆண்:
கார்காலம் என விரிந்த கூந்தல்
கன்னத்தின் மீதே கோலமிட

பெண்:
கைவளையும் மைவிழியும்
கட்டியணைத்துக் கவி பாட (மயக்க)

ஆண்:
ஆடி வரும் வண்ண நீரோடை உன்னை
பாத பூசை செய்து வர

பெண்:
ஓடி வரும் வண்ண ஓடையிலே உன்
உள்ளமும் சேர்ந்து மிதந்து வர

ஆண்:
மல்லிகைக் காற்று மெல்லிடை மீது
மந்திரம் போட்டு தாலாட்ட

பெண்:

வள்ளி மலைத் தேன் அள்ளி எழுந்த
வண்ண இதழ் உன்னை நீராட்ட (மயக்க)

ஆண்:
அன்னத்தைத் தொட்ட கைகளினால் மது
கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்

பெண்:
கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து
மது அருந்தாமல் விட மாட்டேன்

ஆண்:
உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான்
உள்ளத்தினாலும் தொடமாட்டேன்

பெண்:
உன் உள்ளமும் இருப்பது என்னிடமே அதை
உயிர் போனாலும் தரமாட்டேன் (மயக்க)

2 comments:

Bharateeyamodernprince said...

சிவாஜி கணேசனின் மகத்தான நடிப்பிற்கு வசந்த மாளிகை ஒரு உதாரணம்.

நான் கல்லூரியில் அடியெடுத்து வைத்த ஆண்டான 1989-ல்தான் முதன் முறையாகப் பார்த்தேன். இந்தப் பாடலில், மதுக் கோப்பையை படு கேஷுவலாக ஏந்திய படி, சிவாஜி ஒரு ஸ்டைலாக நடந்து வரும் காட்சியின் போது, தி.நகர் (சென்னை) கிருஷ்ணவேணி திரையரங்கே ஆர்ப்பரித்தது. ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு, சில்லறைக் காசுகளை அள்ளி இரைத்தனர் திரையின் மீது. முதல் வருசையில் வந்திருந்தவர்கள் ஓடி ஓடிப்போய் பொறுக்கிக்கொண்டனர். நிரம்பி வழிந்த அரங்கில், ரசிகர்களின் ஒன்ஸ் மோருக்கு இணங்கி, இரண்டாவது முறையாகத் தொடர்ந்து இந்தப் பாடலை திரையிட்டபோது...பழைய பாடலின் மவுசு, நடிகர் திலகத்தின் செல்வாக்கும், நகர் வாழ் மக்களிடத்து மங்காமல் பிழைத்திருந்தது புலனானது.

பாடல் வரிகளை இணையத்தில் இட்டமைக்கும், அருமையான நினைவுகளைத் தட்டி எழுப்பியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.

Chandravathanaa said...

வெங்கடேஷ் வரதராஜன்
வரவுக்கும், தகவல்களுக்கும் நன்றி.