14.9.05

அகரம் இப்போ சிகரம் ஆச்சு

படம் - சிகரம்
பாடியவர் -K.J.Jesuthas
வரிகள் -
இசை - S.P. Balasubramaniam


அகரம் இப்போ சிகரம் ஆச்சு
தகரம் இப்போ தங்கம் ஆச்சு
காட்டு மூங்கில் பாட்டுப் பாடும்
புல்லாங்குழல் ஆச்சு

சங்கீதமே சந்நிதி
சந்தோசம் சொல்லும் சங்கதி

கார்காலம் வந்தால் என்ன?
கடும் கோடை வந்தால் என்ன?
மழை வெள்ளம் போகும்
கரை இரண்டும் வாழும்
காலங்கள் போனால் என்ன?
கோலங்கள் போனால் என்ன?
பொய் அன்பு போகும்
மெய்யன்பு வாழும்


அன்புக்கு உருவமில்லை
பாசத்தில் பருவமில்லை
வானோடு முடிவுமில்லை
வாழ்வோடு விடையுமில்லை

இன்றென்பது உண்மையே
நம்பிக்கை உங்கள் கையிலே

தண்ணீரில் மீன்கள் வாழும்
கண்ணீரில் காதல் வாழும்
ஊடல்கள் எல்லாம் தேடல்கள்தானே
பசியாற பார்வைபோதும்
பரிமாற வார்த்தை போதும்
கண்ணீரில் பாதி காயங்கள் ஆறும்

தலைசாய்க்க இடமாயில்லை
தலை கோத விரலாயில்லை
இளங்காற்று வரவாயில்லை
இளைப்பாறு பரவாயில்லை

நம்பிக்கையே நல்லது
எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது

9 comments:

தருமி said...

சாதாரண வரிகளும் இசையோடு சேரும்போது எவ்வளவு இனிமையாகி விடுகின்றன்.

ஒரு நேயர் விருப்பம்: சட்டி சுட்டதடா கை விட்டதடா...

Chandravathanaa said...

உண்மைதான் தருமி. அற்புதமாக அமைந்து விட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

இதோ உங்கள் விருப்பப் பாடல்

Anonymous said...

Music: S.P. Balasubramaniam

Could you also post the song "PeRRa thaaythanai" from the same movie?

Thanks
.:dYNo:.

Chandravathanaa said...

dyno
நீங்கள் குறிப்பிடும் பாடல் எந்தப் படத்தில்?

Anonymous said...

Sorry didn't check back.

The Movie "Sikaram"'s music was composed by SPB (It might have been his first).

The song I had requested ("பெற்ற தாய்தனை மக மறந்தாலும்...") is also from the movie Sikaram. Its actually a small 'bit'.

thanks
.:dYNo:.

Chandravathanaa said...

dyno
நீங்கள் குறிப்பிடும் பெற்ற தாய்தனை.. பாடல் இசைப்பேழையில் வரவில்லையென்றே நினைக்கிறேன். வானலையில் கேட்டதாக ஞாபகம் இல்லை.
படம் பார்த்து வருடங்கள் ஓடி விட்டன. பாடல் நினைவில் இல்லை. மீண்டும் ஏதாவது வழியில் என் கவனத்துக்கு அப்பாட்டு வரும் பட்சத்தில் உங்கள் பார்வைக்கும் தருகிறேன்.

மற்றும் இசை பற்றிய தகவலுக்கு நன்றி. எனது பதிவில் சேர்த்துள்ளேன்.

Chandravathanaa said...

dyno நீங்கள் கேட்ட பாடல் இங்கே... பெற்றதாய்தனை

ஹரன்பிரசன்னா said...

வரிகள் -

vairamuththu.

Sikaram is not the first movie for spb to compose music, he has already composed music for Rajini's movie 'thudikkum karangal.' But I dont know whether thudikkum karangal is the first movie of spb to compose music.

www.ifunnystory.com said...

HI Akka,
I am anderson from Canada may I have your mail address? I just viewed your blog Amazing akka...
Really good job
anyways my mail address is anda4tamil@gmail.com

thnx
Anderson