3.9.05

இலக்கணம் மாறுதோ

படம் - நிழல் நிஜமாகிறது
பாடியவர்கள் - வாணிஜெயராம் +

இலக்கணம் மாறுதோ
இலக்கியமானதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம்

(இலக்கணம்)

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான தாகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித்தந்தார் மழைக்காலமென்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ

(இலக்கணம்)

மணியோசையென்ன இடியோசையென்ன
எது வந்தபோதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனைக் காக்கக் கண்டேன்
நீயெது நானெது ஏனிந்த சொந்தம்
பூர்வஜென்ம பந்தம்

(இலக்கணம்)

தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப்பாட ஆதாரம் இல்லை
தெய்வங்கள் எல்லாம் உனக்காகப்பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி திறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை

புரியாததாலே திரைபோட்டு வைத்தேன்
திரைபோட்ட போதும் அணைபோட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கிவைப்பாயோ
விளக்கிவைப்பாயோ

(இலக்கணம்)

7 comments:

Maravandu - Ganesh said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்

//மறைத்திடுமவிலக்கிவைப்பாயோ//


இங்கே வார்த்தை ஒண்ணு குறையுது பாருங்க

என்றும் அன்பகலா
மரவண்டு

ஜென்ராம் said...

மறைத்திடும் திரைதனை ?

Chandravathanaa said...

கணேஷ், ராம்கி
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.
மறைத்திடும் திரைதனை என்பதைச் சேர்த்துள்ளேன்.

சீனு said...

மெண்மையான பாடல்கள் மட்டும் அல்லாமல், வரிகள் நன்றாக இருந்தால், கானா மற்றும் குத்து பாடல்களையும் பிரசுரிக்கலாம்.
உதா, "தலை கீழா பொறக்குறான்" - ஜெமினி.
"சீனா தானா" (ஆபாசமா இருந்தாலும் நல்ல எதுகை மோனையுடன் உள்ள ஒரு பாடல்).
"ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா"

சிநேகிதன்.. said...

வாணி ஜெயராம்+s.p.பாலா..

சிநேகிதன்.. said...

வாணி ஜெயராம்+s.p.பாலா..

ஹரன்பிரசன்னா said...

Music MSV, Lyrics by Kannadasan