6.7.05

இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை

படம் - துள்ளாத மனமும் துள்ளும்
வரிகள் - வைரமுத்து
குரல் - உன்னி கிருஷ்ணன்
இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்


இன்னிசை பாடிவரும்
இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனசு தொலைகிறதே

(இன்னிசை)

கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சி என்றால்
கற்பனை வளர்ந்துவிடும்
ஆடல் போலத் தேடல் கூட
ஒரு சுகமே

(இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதோ
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
ஆடல் போல தேடல் கூட
ஒரு சுகமே

(இன்னிசை)

10 comments:

தருமி said...

கேட்டதைவிட வாசிக்கும்போது பாடல் வரிகள் அர்த்தமாயின. அருமையான் வரிகள்.

வரிகளைக் கொடுத்தவர் பெயர் வேண்டாமா? யாரவர்?

Chandravathanaa said...

நன்றி தருமி,
வரிகள் - வைரமுத்து.
நீங்கள் கேட்டதற்கமைய வரிகளைக் கொடுத்தவரையும் சேர்த்துள்ளேன்.

சக்தி
வரவுக்கும் பதிவுக்கும் நன்றி.

தருமி said...

நன்றி.

"நீங்கள் கேட்டதற்கமைய வரிகளைக் கொடுத்தவரையும் சேர்த்துள்ளேன்"
- ஒரு வேண்டுகோள் - எப்போதும் இது போல் கவிஞர்கள் பெயரையும் தந்தால் நன்று.

NONO said...

எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று!! வரிகளுக்கு நன்றி!!!

enRenRum-anbudan.BALA said...

அற்புதமான வரிகள் !

சுகமான இசை !

உன்னியின் மென்மையான குரல் !

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி, சந்திரா !!!

Chandravathanaa said...

///Dharumi said...
நன்றி.

"நீங்கள் கேட்டதற்கமைய வரிகளைக் கொடுத்தவரையும் சேர்த்துள்ளேன்"
- ஒரு வேண்டுகோள் - எப்போதும் இது போல் கவிஞர்கள் பெயரையும் தந்தால் நன்று.///


அப்படியே செய்ய முயற்சிக்கிறேன் தருமி.
சில சமயங்களில் யார் எழுதினார்கள் என்று தெரியாமலும் போய் விடுகிறது.
அந்த நேரத்தில் முடிந்தால் உதவுங்கள்.

நட்புடன்
சந்திரவதனா

Chandravathanaa said...

nono, பாலா
உங்கள் இருவரது கருத்துக்களுக்கும் நன்றி.

தருமி said...

"சில சமயங்களில் யார் எழுதினார்கள் என்று தெரியாமலும் போய் விடுகிறது.
அந்த நேரத்தில் முடிந்தால் உதவுங்கள்."

அவ்வளவு தெரிஞ்சா நான் ஏன் கேட்கப்போறேங்க!
இருந்தாலும் அப்பப்போ குழப்புறேன், சரியா

Sud Gopal said...

அற்புதமான பாடல்.
நன்றிகள் பல அதனை ஞயாபகப்படுத்தியமைக்கு.

Chandravathanaa said...

நன்றி தருமி

நன்றி சுதர்சன் கோபால்