31.5.05

உனக்கென இருப்பேன்

படம்: காதல்
பாடல்: உனக்கென இருப்பேன்
பாடியவர்: ஹரி சரண்
பாடல் வரிகள்:நா.முத்துக்குமார்


உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...! பெண்மணியே..!
அழுவதேன்... கண்மணியே..!
வழித்துணை நான் இருக்க,

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்
கண்மணி காதலின் நெஞ்சம்தான் தாங்கிடுமா?
கல்லறை மீதுதான் பூத்த பூக்கள்
என்றுதான் வண்ணத்திப்பூச்சிகள் பார்த்திடுமா?

மின்சார கம்பிகள் மீது
மைனாக்கள் கூடு கட்டும்.
நம் காதல் தடைகளை தாண்டும்.
வளையாமல் நதிகள் இல்லை,
வலிக்காமல் வாழ்க்கை இல்லை.
வரும் காலம் காயம் ஆற்றும்
நிலவொளியை மட்டும் நம்பி
இலையெல்லாம் வாழ்வதில்லை
மின்மினியும் ஒளி கொடுக்கும்

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய்
தோழியே..! இரண்டுமாய் என்றுமே நானிருப்பேன்
தோளிலே நீயுமே சாயும்போது
எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிர்ப்பேன்

வெந்நீரில் நீ குளிக்க
விறகாகித் தீ குளிப்பேன்,
உதிரத்தில் உன்னைக் கலப்பேன்
விழிமூடும்போது முன்னே
பிரியாமல் நான் இருப்பேன்,
கனவுக்குள் காவல் இருப்பேன்
நான் என்றால் நானேயில்லை
நீதானே நானாய் ஆவேன்.
நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்
உயிரையும் கொடுப்பேன்
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்
கண்மணியே...! பெண்மணியே..!
அழுவதேன்... கண்மணியே..!
வழித்துணை நான் இருக்க..
வழித்துணை நான் இருக்க..

16 comments:

ஏஜண்ட் NJ said...

ஏதாவது இலங்கைத்தமிழ் பாடல்களையும் எழுதுங்களேன்;
இந்திய வல்லூறுகளின் தமிழ் பாடல்களை மட்டுமே படிக்க 'பஞ்சி'யாக இருக்கிறது.

Anonymous said...

இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் வல்லூறுகள் என்று நீங்கள் முடிவு கட்டி விட்டீர்களா?

ஏஜண்ட் NJ said...

கூடவே புலி மற்றும் சிறுத்தைகளும் உண்டாம் !

எழில் said...

இப்பாடலைப் பாடியவர் ஹரி சரண் எனும் புதியவர்.

Boston Bala said...

எளிமையான பாடல்

Chandravathanaa said...

<ஞானபீடம் said...
ஏதாவது இலங்கைத்தமிழ் பாடல்களையும் எழுதுங்களேன்


ஞானபீடம்

இங்கே ஈழத்தவர் பாடல்கள் உள்ளன.

இங்கே போர்க்கால தாயககீதங்கள் உள்ளன.

Chandravathanaa said...

எழில்
தகவலுக்கு நன்றி.
மாற்றி விடுகிறேன்.

பாலா
நீங்கள் சொல்வது போல எளிமையான பாடல்தான்.
கேட்கும் போது மனதுக்கு ஏதோ ஒரு வகை இதத்தைத் தரக்கூடிய பாடல்.

Sud Gopal said...

காதலில் மென்சோகத்தினை வெளிப்படுத்தும் மற்றுமொரு அருமையான பாடல்.

பாடல் படமாக்கப்பட்ட விதமும் மிக அருமை.

பாடலுக்குச் சொந்தக்காரர்:நா.முத்துக்குமார்.

Chandravathanaa said...

தகவலுக்கு நன்றி சுதர்சன்.
அதையும் சேர்த்துள்ளேன்.

சீனு said...

//வெண்ணீரில் நீர் குளிப்பேன்,
விறகாகி தீ குளிப்பேன்,
//

இது இப்படி வரவேண்டும்...

"வெண்ணீரில் நீ குளிக்க,
விறகாகித் தீ குளிப்பேன்"

Chandravathanaa said...

நன்றி சீனு
திருத்தியுள்ளேன்.

Atpu said...

வெண்ணீரில் அல்ல;
வெந்நீரில் நீ குளிக்க என்று நினைக்கிறேன்.

Atpu said...

வெண்ணீரில் அல்ல;
வெந்நீரில் என்று நினைக்கிறேன்.

Chandravathanaa said...

atpu

தகவலுக்கு நன்றி.
மாற்றி விடுகிறேன்

JOHN CHRISTOPHER said...

இது பழைய Post ஆக இருந்தாலும்....

நிலவொளியை மட்டும் நம்பி
இரவுகள் வருவதில்லை..
மின்மினியும் ஒளி கொடுக்கும்..

இது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்...

Chandravathanaa said...

நன்றி ஜோன் கிறிஸ்தோபர்.
பாட்டை மீண்டும் ஒரு முறை கேட்டுப் பார்த்தேன்.
"இலையெல்லாம் வாழ்வதில்லை.." என்றுதான் எனக்குக் கேட்கிறது.
இன்னும் சிலமுறைகளாவது கேட்டுப் பார்த்து உறுதி செய்த பின் திருத்துகிறேன்.