13.5.05

வாழ நினைத்தால் வாழலாம்

வரிகள் - கண்ணதாசன்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

(வாழ)

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

(வாழ)

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

(வாழ)

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்

(வாழ)

2 comments:

சுதர்சன்.கோபால் said...

சுசீலா பாடிய இந்தப் பாடல் பலே பாண்டியா என்ற படத்தில் இடம் பெற்றது என நம்புகிறேன்.

படம் ரொம்ப காமெடியா இருக்கும்.

சிவாஜி நடிப்பில் எனக்குப் பிடித்த வெகு குறைவான படங்களில் இதுவும் ஒன்று.

இந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றுமொரு இனிமையான பாடல்,"அத்திக்காய் காய் காய்".

தகவல் உபயம்:எனது அம்மா.

Chandravathanaa said...

சுதர்சன்
நீங்கள் சொன்ன தகவல் சரியாகத்தான் இருக்கும். அதுவும் உங்கள் அம்மா சொன்னால் கண்டிப்பாகச் சரியாகத்தான் இருக்கும்.
இந்தப் படத்தை நான் பார்த்ததாக ஞாபகம் இல்லை. அதனால் comedy பற்றித் தெரியவில்லை.
எனக்கு அந்த நேரத்தில் பிடித்த comedy படங்களில் பாமாவிஜயம், எதிர்நீச்சல் இரண்டுமே குறிப்பிடத் தக்கவை.

நீங்கள் குறிப்பிட்ட அத்திக்காய் பாடலும் மடக்கு அணியில் அமைந்த அருமையான பாடல். இன்று அப்பாடலை நீங்கள் நினைவூட்டியதால் இங்கு பதிந்துள்ளேன்.
இப்பாடலோடு சேர்ந்த இன்னொரு நினைவுச் சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது. அதை முடிந்தால் இன்று எனது மனஓசையில் பதிகிறேன்.