11.5.05

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

படம் - அபூர்வராகங்கள்
பாடியவர் - வாணி ஜெயராம்
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்


ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

11 comments:

ஜெ. ராம்கி said...

தலைவன் திருச்சானூர் வந்துவிட்டான்
தலைவியின் தர்மதரிசனம் தேடிநின்றான்....

அதிரும் மிருதங்க ஓலியில் அழுத்தமாக பதிந்த வரிகள்...

மறந்துட்டீங்களா?

ஜெ. ராம்கி said...

ம்... நேத்து ராத்திரி கே.பி வந்து திட்டிட்டு போனாரு... கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு 'ஏழு ஸ்வரங்களுக்குள்' பாட்டையும் 'கேள்வியின் நாயகனே' பாட்டையும் குழப்பிக்கிட்டேனாம்! நல்லவேளை யாரும் பார்க்கலை!

Chandravathanaa said...

ரஜினி ராம்கி
நான் பார்த்தேன். என்ன ஏதென்று புரியாமல் குழம்பி விட்டு
ஆறுதலாக வந்து பார்ப்போமென நினைத்துப் போய் விட்டேன்.
நீங்களே திரும்ப வந்து எழுதி குழப்பத்தைப் போக்கியதற்கு நன்றி

Sud Gopal said...

அக்கா,
இந்தப் படத்தில் ஒரு பாட்டுக்காக வாணியம்மா தேசிய விருது வாங்கினார்கள்.அது இந்தப் பாட்டிற்கா???

G.Ragavan said...

ஆகா அருமையான பாடல்

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவன் உண்டு கோயிலில் காண்க

கண்ணதாசா கண்ணதாசா...........

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
எனக்காக உணவு உண்ண எப்படி முடியும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு
அதை நமக்காக நம் கையால் செய்வது நன்று

மெல்லிசையும் தீந்தமிழும் இணைந்து தேன் குரலில் ஒலிக்கும் பாடல்.

சந்திரவதனா, நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.

Chandravathanaa said...

ராகவன் நன்றி.

சுதர்சன் மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ என்ற பாடலுக்கு விருது கிடைத்தது தெரியும். இப்பாடலுக்கு கிடைத்ததா என்பது பற்றித் திடமாகத் தெரியவில்லை. வேறு யாருக்காவது தெரிந்தால் சொல்வார்களென எதிர் பார்க்கிறேன்..

Unknown said...

வாணி விருது வாங்கியது "மேகமே மேகமே" பாட்டிற்கல்லவா?

இந்தப் படத்திலும் விருது வாங்கினாரா சுதர்ஸன்?

G.Ragavan said...

இந்தப் பாடலுக்கும் வாணி ஜெயராம் அவர்கள் தேசிய விருது வாங்கினார்கள். முதல் தேசிய விருது என நினைக்கிறேன்.

Chandravathanaa said...

Ragavan, KVR
எனக்கு வாணி ஜெயராம் எந்தெந்தப் பாடல்களுக்கு விருதுகள் வாங்கினார் என்ற விபரங்கள் நினைவில் இல்லை. நீங்கள் தந்த தகவல்களுக்கு நன்றி.

CS. Mohan Kumar said...

ஆம்.. இந்த பாடலுக்கு வாணி ஜெயராம் தேசிய விருது வாங்கினார்...

எனக்கு மிகவும் பிடித்த பாடல்..

"பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்" வரிகள் பல முறை நினைத்து, ஆரம்பித்த கடின வேலையை நிறுத்தாமல் தொடருவேன்.

இந்த பாடல் குறித்து இன்னொரு சுவரஸ்யமான செய்தி.. இந்த பாடல் எழுதாமல் எதோ காரணத்தால் கண்ணா தாசன் தாமதித்தார்.. கடைசியில் பாடல் ஒலிப்பதிவு நாளன்று காரில் செல்லும் போது வேகமாக பல சரணங்கள் கூறினாராம். அவற்றில் சிலவற்றை மட்டும் எடுத்து பாடலுக்கு உபயோகம் செய்தனாராம். அவற்றில் எதை விடுவது என பாலா சந்தர் தடுமாறி போனாராம்!

நல்ல பாடலை நினைவூட்டியதற்கு நன்றி

நானும் ஒரு blogger -தான். எனது blog படிக்க: http://veeduthirumbal.blogspot.com

Unknown said...

அதுவேற பாட்டு இதுவேற பாட்டு..