10.12.04

ஊருக்கும் வெட்கமில்லை

படம்: யாருக்கும் வெட்கமில்லை
பாடியவர்: ஜேசுதாஸ்
எழுதியவர் - தெரியவில்லை


ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன..!
ஏ சமுதாயமே....

மேலும் கீழும் கோடுகள் போடு
அதுதான் ஓவியம்
நீ சொன்னால் காவியம்
ஓவியம் என்றால் என்னவென்று
தெரிந்தவர் இல்லையடா..!
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால்
அதுதான் தொல்லையடா..!

அத்தனை பழமும் சொத்தைகள்தானே
ஆண்டவன் படைப்பினிலே..!
அத்திப்பழத்தை குற்றம் கூற
யாருக்கும் வெக்கமில்லை..!
மூடர்களே பிறர் குற்றத்தை மறந்து
முதுகைப் பாருங்கள்..!
முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு
அதனைக் கழுவுங்கள்..!

சுட்டும் விரலால் எதிரியை காட்டி
குற்றம் கூறுகையில்..!
மற்றும் மூன்று விரல்கள்
உங்கள் மார்பினை காட்டுதடா..!
எங்கேயாவது மனிதன் ஒருவன்
இருந்தால் சொல்லுங்கள்..!
இருக்கும் அவனும் புனிதன் என்றால்
என்னிடம் காட்டுங்கள்..!

அப்பன் தவறு பிள்ளைக்கு தெரிந்தால்
அவனுக்கு வெட்கமில்லை..!
அத்தனை பேரையும் படைத்தானே
அந்த சிவனுக்கும் வெட்கமில்லை..!
இப்போதிந்த உலகம் முழுவதும்
எவனுக்கும் வெட்கமில்லை..!
எல்லார் கதையும் ஒன்றாய் முடிக்கும்
எமனுக்கும் வெட்கமில்லை..!

5 comments:

ravi srinivas said...

song by kannadasan
music m.s.visvanathan
film yarukkum vedkamillai
direction cho
year 1975 (?)

Jsri said...

சந்திரவதனா, நல்ல பாடல்களைத் தெரிவு செய்து போடுகிறீர்கள். பதிவிலேயே சுட்டிவைத்து அதை உடனே நாங்கள் கேட்பதுபோல் இருந்தால் இன்னும் சிறப்பாக உங்கள் பதிவை நாங்கள் உணரமுடியும் என்பது என் கருத்து. வாசகர்களும் இவற்றை எப்போதோ தான் கேட்டிருப்பார்கள்; அல்லது தவறி இருப்பார்கள். நீங்கள் சொன்னபிறகு நினைத்தாலும் பல பாடல்கள் இணையத்தில் கிடைப்பதில்லை/ அல்லது தேடி எடுத்து உடனே கேட்க வாசகருக்குப் பொறுமை இல்லாமல் போகலாம். பாடல் கையோடு உங்கள் பதிவிலேயே கிடைத்தால் உங்கள் உணர்வை உடனடியாக வாசகர்களுக்கும் நீங்கள் கொண்டுசெல்ல முடியும்.

இப்போதே இல்லாவிட்டாலும், கொஞ்சம் நாள் எடுத்தாவது இதை பரிசீலனை செய்யுங்கள். நன்றி.

Chandravathanaa said...

வணக்கம் ரவி சிறீனிவாஸ்

தொடர்ந்தும் இப்படியான ஒத்துழைப்புகளைத் தந்து எனது பதிவுகளை நிறைவாக்குங்கள்.
நன்றி.

நட்புடன்
சந்திரவதனா

Chandravathanaa said...

வணக்கம்

உங்கள் கருத்துக்கு நன்றி.
நானும் இது பற்றிப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனாலும் செயற் படுத்தவில்லை.
நீங்களும் சொன்ன பின் கட்டாயம் பாடல்களைத் தேடி எடுத்து இணைக்க வேண்டுமென்ற
எண்ணம் வந்துள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும் விரைவில் செயற் படுத்துகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

Chandravathanaa said...

வணக்கம் Jsri

உங்கள் கருத்துக்கு நன்றி.
நானும் இது பற்றிப் பலமுறை யோசித்திருக்கிறேன். ஆனாலும் செயற் படுத்தவில்லை.
நீங்களும் சொன்ன பின் கட்டாயம் பாடல்களைத் தேடி எடுத்து இணைக்க வேண்டுமென்ற
எண்ணம் வந்துள்ளது. உடனடியாக இல்லாவிட்டாலும் விரைவில் செயற் படுத்துகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா