7.12.04

தகிடததுமி தகிடததுமி தந்தானா

படம் - சலங்கை ஒலி
பாடியவர் - பாலசுப்ரமணியம்
இசை - இளையராஜா

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா

சுதியும் லயமும் ஒன்று சேர
தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

உலக வாழ்கை நடனம்
நீ ஒப்புக் கொண்ட பயணம்
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்

மனிதன் தினமும் அலையில் அலையும் ...
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளம் இங்கு தப்பவில்லை
யார் மீதும் தப்பும் இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை

தகிடததுமி தகிடததுமி தந்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா

பழைய ராகம் மறந்து
நீ பறந்ததென்ன பிரிந்து
இரவு தோறும் அழுது
என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவம் உண்டு பாபம் இல்லை
வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்கவில்லை.

இப்பாடல் எனது பார்வையில்

4 comments:

Anonymous said...

>>>>மனிதன் தினமும் அலையில் அலையும் ...

-குமிழி-

-dyno

Sud Gopal said...

"பாவம் உண்டு ... இல்லை"
பாவம் உண்டு.பாபம் இல்லை.

வைரமுத்துவின் ஆரம்ப காலப் பாடல்களில் இதுவும் ஒன்று.

தெலுங்கிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் என்றாலும் அந்த உணர்வே வராத படி பாடல்களை அமைத்தது ஒரு பெரிய சாதனையாகும்.

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

enakkukkuuda inthap paadal varikaL, kamalin aattam, ellaamE pidikkum

K.Vishvanathanin inthappadam 'salangkai oli'enakkup pidiththa sila padangkaLuL orunRu.

anbudan, jayanthi sankar

Chandravathanaa said...

Kumli, Sutharsan & Jeyanthi
Moovarukkum nantri