6.12.04

நலந்தானா நலந்தானா

படம் - தில்லானா மோனாம்பாள்
பாடியவர் - பி.சுசீலா
இசை - கே.வி.மகாதேவன்

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

நலம் பெறவேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறைகாய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
என் கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட சேதியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்

நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
............................
............................

நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா

இப்பாடல் எனது பார்வையில்

2 comments:

Anonymous said...

சந்திரா, அந்தப் பாடலில் சிவாஜி தலையை ஆட்டிக் கொண்டே கண்ணீர் ததும்பும் விழிகளோடு, கண்ணடிக்கும்பொழுது, பத்மினிக்கும் அவருக்கு இடையில் ஒரு ".இது" இருப்பது நன்றாக தெரியும்.
usha

Chandravathanaa said...

உஷா நீங்களும் ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் போலுள்ளது.

நட்புடன்
சந்திரவதனா