14.11.04

நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!

படம் - மறுபடியும்
பாடியவர் - எஸ்.பி.பாலா
வரிகள் - வாலி


நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!
இதிலென்ன பாவம்.....!
எதற்கிந்த சோகம்? கிளியே..!

கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!
கடல்களில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!
ஒரு வாசல் மூடி......!
மறுவாசல் வைப்பான் இறைவன்!

7 comments:

Anonymous said...

chandravathana,
ithu oru mika arumaiyAna pAtal enpathil santhEkamillai!
nIngkaLum 'pallaviyum saraNamum' onRai thotangkalAmE? oru siRukathaiyai ennitamirunthu viraivil ethirpArkkalAm
enRenRum anpudan
BALA

tamil said...

புதிய இணையதளத்துக்கு இனிய வாழ்த்துக்கள்..
-ஷண்முகி-

Chandravathanaa said...

பாலா, சண்முகி

என் பக்கம் வந்தது மட்டுமல்லாமல் உங்கள் கருத்துக்களையும்
பதிந்து சென்றதற்கு மிகவும் நன்றி.

பாலா
உங்கள் சிறுகதையை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
நானும் பல்லவியும் சரணமும் எழுதலாமா என ஒரு தடவை யோசித்தேன்.
ஆனாலும் நீங்கள் எழுதும் போது அதைக் கண்டு பிடித்து எழுதுவது
எனக்கு இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

நட்புடன்
சந்திரவதனா

Anonymous said...

ஏங்க ரகசியமா வாழ்த்து சொல்றிங்க. தைரியமா சொல்லுங்க

Sud Gopal said...

"விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!"

படத்தில் இந்தச் சூழலுக்குப் பொருத்தமான வரிகள்.

வாலி எழுதிய பாடல் இது...

Chandravathanaa said...

நன்றி சுதர்சன்.
தகவலைச் சேர்த்துள்ளேன்.

Anonymous said...

nalla irukku