8.11.04

பண்பாடும் பறவையே என்ன தூக்கம்?

படம் - அரசகட்டளை
பாடியவர் - பி.சுசிலா

பண்பாடும் பறவையே என்ன தூக்கம்
உன் பழங்காலக் கதை இன்று யாரைக் காக்கும்
தண்ணீரும் இரத்தமும் ஒன்றுதானா
நீ தாயற்ற கன்று போல ஆகலாமா..!

ஆண்டாண்டு காலம் நாம் ஆண்ட நாடு
அன்னை தந்தை மக்கள் சுற்றம் வாழ்ந்த நாடு
தோன்றாமற் தோன்றும் வீரர் சொந்த நாடு
தூங்கித் தூங்கி சோர்ந்து விட்டது இந்த நாடு!

அடிமை வாடும் பாடம் இன்று படிக்கலாமா
நல்ல அமுதமென்று நஞ்சை அள்ளிக் குடிக்கலாமா
தன்னலத்தில் இன்பங்காண நினைக்கலாமா
பெற்ற தாயிடத்தில் அன்பில்லாமல் இருக்கலாமா..!

பகுத்தறிந்து வாழ்பவனைச் சரித்திரம் பேசும்
அவர் பரம்பரையின் கால்கள் மீது மலர்க்கணை வீசும்
பயந்து வாழும் அடிமைகளைப் பூனையும் ஏசும்
அவன் பால் குடித்த தாயைக் கூட பேயெனப் பேசும்!

குடித்த பாலில் வீரம் கலந்து
கொடுத்தாள் உந்தன் அன்னை
குடித்த பின்னும் குருடாய் இருந்தால்
கோழை என்பாள் உன்னை
உரிமைக் குரலை உயர்த்தி இங்கே
விடுதலை காணத் துடித்துவா
உறங்கியதெல்லாம் போதும் போதும்
உடனே எழுந்து ஓடிவா!

No comments: