14.8.09

பூங்கொடி தான் பூத்ததம்மா

படம் - இதயம்
இசை - இளையராஜா
பாடியவர் - எஸ்.பி. பாலசுப்பிரமணியம்


பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா


ஆசைக்குத் தாள் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க வாடைக் காற்று
பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா


தாய் கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே
பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன?
ஊமைக்குப் பாடலென்ன?
ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..ஓ..

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

No comments: