15.5.09

புன்னகையில் கோடி பூங்கவிதை

புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும் தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண் நிலவு இரண்டு உலகில் கிடையாது

ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்று குறையாதோ பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

வானில் தோன்றும் மாலை சிவப்பு
வானில் தோன்றும் மாலை சிவப்பு
விழிகளில் பாதி விரல்களில் பாதி
விழிகளில் பாதி விரல்களில் பாதி
மூன்று கனிகளின் சுவை கொண்டு
நேர் வந்து நின்றது கொடி ஒன்று
ஒன்றும் அறியாத பெண்ணோ

நிலவென்ன நெருப்பென்ன
உலவும் பேரழகே
உனக்குள்ளே முள்ளோ மாமலரோ
என மயக்கம் பிறக்குதடி
எனக்குள்ளே என்னென்று ஏதென்று
இனங்கான வடிவத்தை
பெண்ணென்று பார்த்த மனம்
பித்தாகி போனதம்மா

பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை
பாவை இனங்களும் அது போல
நாம் பழகி பார்க்கையில் மதுபோலே

ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ

4 comments:

Jiffry U Meerashibu said...

Dear Chandravathanaa Selvakumaran,
We have fortunate to find your blog. Very useful and a lot work you have done.
We have posted your blogs at http://www.Kalasam.com/
Very useful.
Thank you for your time to make lots of Tamils life easier and worth full.
Kalasam team

Jiffry U Meerashibu said...

Dear Chandravathanaa Selvakumaran,
We have fortunate to find your blog. Very useful and a lot work you have done.
We have posted your blogs at http://www.Kalasam.com/
Very useful.
Thank you for your time to make lots of Tamils life easier and worth full.
Kalasam team

SUNDAR said...

எனக்கு மிகவும் பிடித்த பாடலை பதிவிட்டிருக்கிறீர்கள் நன்றி!
அனால் அதில் சில பிழைகள் இருக்கிறது என்று கருதுகிறேன்

"விண்ணளவு இரண்டு உலகில் கிடையாது"

என்பது

"வெண் நிலவு இரண்டு உலகில் கிடையாது" என்று வர வேண்டும்

"எனக்குள்ளே என்னென்று ஏதென்று
இனங்கான வடிவத்தை"

இதை தொடர்ந்து

"பெண்ணென்று பார்த்த மனம் பித்தாகி போனதம்மா"

என்ற வரியை சேர்க்க வேண்டும்.

"பாலும் வெண்மை கள்ளும் வெண்மை
பருகிடும் வேளை புரிந்திடும் உண்மை"

என்ற வரிக்கு பிறகு

"பாவை இனங்களும் அது போல
நாம் பழகி பார்க்கையில் மதுபோலே"

என்று வரவேண்டும் என்று கருதுகிறேன்
நன்றி!
SUNDAR

Chandravathanaa said...

நன்றி சுந்தர்.