5.4.08

தீயில் விழுந்த தேனா?

படம் : GOD FATHER
இசை : A.R.ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
குரல் : A.R.ரஹ்மான்


தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் வழிந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

மழையின் நீர் வாங்கி, மலையே அழுவது போல்,
தாயின் உயிர் தாங்கி, தனயன் அழுவானோ?

உயிரைத்தந்தவளின், உயிரைக்காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

தங்கம் போலே இருந்தவள்தான்,
சருகைப் போலே ஆனதனால்,
சிங்கம் போலே இருந்த மகன்,
செவிலியைப் போலே ஆவானா?

(தீயில்)

ஓர் சொல்லில் ஓர் உலகம் அம்மா!
உலகெல்லாம் ஓர் சொல்லும் அம்மா!

(ஓர்)

நீ சுமந்த பிள்ளையாய் நானிருந்தேன் அம்மா!
நான் சுமக்கும் பிள்ளையாய் நீ ஆனாய் அம்மா!
எனக்கேதும் ஆனதுன்னா, உனக்கு வேறு பிள்ளையுண்டு!
உனக்கேதும் ஆனதுன்னா,எனக்கு வேற தாயிருக்கா?

நெஞ்சை ஊட்டி வளர்த்தவளை,
கண்ணில் மணியாய்ச் சுமந்தவளை,
மண்ணில் விட்டு விடுவானா?
மனதில் மட்டும் சுமப்பானா?

தீயில் விழுந்த தேனா? - இவன்
தீயில் விழுந்த தேனா?
தாயைக் காக்கும் மகனா? - இல்லை
தாயும் ஆனவனா?

(தீயில்)

தாயின் மடிதானே உலகம் தொடங்குமிடம்!
தாயின் காலடியே உலகம் முடியுமிடம்!

உயிரைத் தந்தவளின், உயிரைக் காப்பானா?
கடனைத் தீர்ப்பானா?

கருணைத் தாயின் நினைவினிலே,
கல்லும் கொஞ்சம் அழுதுவிடும்!
கண்ணீர்த் துளிகளின் வேகத்திலே,
கண்ணின் மணிகளும் விழுந்துவிடும்!

(தீயில்)

2 comments:

Tamil Videos On Demand said...

ilaiyaraja mattrum a r rahman pada paadalgal. Hope this helps many tamil fans.

Tamil Videos On Demand said...

ilaiyaraja mattrum a r rahman pada paadalgal inge -> http://tamilmoviewaves.blogspot.com/2008/04/video-songs.html . Hope this helps many tamil fans.