10.2.08

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த

படம் : பாத காணிக்கை
குரல் : பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: விஸ்வனாதன் ராமமூர்த்தி
நடிகர்கள்: சாவித்திரி


எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி - இன்று
வேறுபட்டு நின்றானடி

தேரோடும் வாழ்வில் என்று
ஓடோடி வந்த என்னை
போராட வைத்தானடி - கண்ணில்
நீரோட விட்டானடி - கண்ணில்
நீரோட விட்டானடி

கையளவு உள்ளம் வைத்து
கடல் போல் ஆசை வைத்து
விளையாடச் சொன்னானடி - என்னை
விளையாடச் சொன்னானடி - அவனே
விளையாடி விட்டானடி

காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி - எந்தன்
கோலம் வர வேண்டாமடி

(எட்டடுக்கு)

6 comments:

புதுப்பாலம் said...

சகோதரியே,

நல்ல ஒரு சோகப் பாடல். ஆடியோ வடிவில் கிடைத்தால் கேட்க விருப்புகிறேன். தங்களிடம் ஆடியோ இருந்தாலோ அல்லது இணையத்திலிருந்து இறக்கிக் கொள்ள (site addres,link) இருந்தாலோ தரவும்.

அன்புடன்
இஸ்மாயில் கனி
http://kaniraja.blogspot.com
kaniraja@gmail.com

SP.VR. SUBBIAH said...

///எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்///

எட்டடுக்கு மாளிகை என்பது எண் ஜான் கையளவு கொண்ட மனித உடம்பு. அதில் ஏற்றிவைப்பது என்பது ஒருவரைத் தன் தலையில் வைத்துக் கொண்டாடுவது - எத்தனை பேருக்கு இது தெரியும் சகோதரி?

அருமையான் பாடல் பதிவிட்டமைக்கு நன்றி!

Chandravathanaa said...

இஸ்மாயில் கனி
கிடைத்தால் கண்டிப்பாகத் தருகிறேன்.

Chandravathanaa said...

நன்றி SP.VR. SUBBIAH

Chandravathanaa said...

வணக்கம் புதுப்பாலம்

இந்த இணைப்பில் பாடலைக் கேட்கலாம்.

http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=23895
தரவிறக்க முடியவில்லை.

வேறு கிடைத்தால் கண்டிப்பாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

புதுப்பாலம் said...

நன்றி.

இவண்
இஸ்மாயில் கனி