18.9.07

பூமுடிப்பாள் இந்த பூங்குழலி

படம் - நெஞ்சிருக்கும் வரை
இசை .எம.எஸ் .விஸ்வநாதன்
பாடடியவர்-T.M.சௌந்தரராஜன்



பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக் கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தாய் வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித் திங்கள் இருபதாம் நாள்...
திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும்,
நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து
வாழ்த்தியருள வேண்டுகிறேன்

தங்கள் நல்வரவை விரும்பும்
ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா...மன்.

மாதரார் தங்கள் மகளென்று பார்த்திருக்க...
மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க...
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர....
கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர...
காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க...
ஆனந்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க....
கொட்டியது மேளம்....
குவிந்தது கோடி மலர்...
கட்டினான் மாங்கல்யம்...
மனை வாழ்க துணை வாழ்க...

குலம் வாழ்க...
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

பூ முடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி.... கண்ணில் நீரெழுதி.....

10 comments:

SP.VR. SUBBIAH said...

கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற அற்புதமான பாட்ல்கள் பலவற்றில் இந்தப் பாடலும் ஒன்று.
பதிவிட்ட்மைக்கு நன்றி சகோதரி!

///கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக///
முத்தாய்ப்பான வரிகள்.

Chandravathanaa said...

நன்றி SP.VR.சுப்பையா.

அற்புதமான பாடல்தான்.
அந்த வரிகள் எனக்கும் பிடித்தவை

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரவதனா!
ஒரு திருமண நிகழ்வை எப்படி நடத்த வேண்டும் என்பது கூட வரிக்குவரி கவிஞர் அழகாகக் குறிப்பிட்டெழுதியுள்ளார். என்றும் மறக்கமுடியாத இனிய பாடல்; விஸ்வநாதன்;சௌந்தரராஜன்,சிவாஜி,சீறீதர் எல்லோருமே
கட்டாயம் இப்பாடலுக்கு நினைவு கூரப்படவேண்டியவர்கள்.
மாதனார் என்பதை மாதரார் ,ஆனந்தம் என மாற்றிவிடவும்.இப்பாடலைத் தேடி தொடுப்புக் கொடுத்திருக்கலாம்.

Chandravathanaa said...

நன்றி யோகன்.
மாற்றி விட்டேன்.
பாடலைத் தேடிப் பிடித்து தொடுப்புக் கொடுக்கப் பார்க்கிறேன்.

Unknown said...

நன்றி நன்றி நன்றி
///கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ
கடமை முடிந்தது கல்யாணம் ஆக///

Karthikkaraikudy said...

What a song!! what 50 yrs! Still wonder any other song comes close to express feeling and events of Marriage!

Tamil land cursed!! I wonder!?? Ramanujam, Kanndasan, Bharati all departed well before their times!! Sign of cursed state to come they indicated!

Karthik
Bangalore.

Karthikkaraikudy said...

http://goo.gl/sGdVvj Link to video of the song! Ripper!
Thank you for posting Lyrics!

Chandravathanaa said...

Thx Karthik!

Unknown said...

காலத்தால் அழியாத...
கண்ணதாசனின் பாடல்...

Unknown said...

காலத்தால் அழியாத...
கண்ணதாசனின் பாடல்...