7.9.07

மாலையில் யாரோ மனதோடு பேச

பாடியவர் - ஸ்வர்ணலதா
படம் - சத்ரியன்






மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச


தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்து பாடலை
ஒருநாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசை காதலை
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச

கரை மேல் நானும் காற்று வாங்கி
விண்ணைப்பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து
கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல
கடலில் பாயக் கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல
உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச

தேகம் பூத்ததே ஓ... ஓ...
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ... ஓ...
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது

நெஞ்சமே பாட்டெழுது - அதில்
நாயகன் பேரெழுது


மாலையில் யாரோ மனதோடு பேச... என்ற பாடல் ஸ்வர்ணலதாவின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்கிறார்கள்.

இது பற்றி ஸ்வர்ணலதா -
"நிஜம்தான். அந்தப் பாடல்தான் என் மியூசிக் கேரியரில் ஒரு திருப்பு முனையைத் தந்தது. என் பெயரை எல்லோரிடமும் அறிமுகப்படுத்தியது. அந்தப் பாடலின் டியூனை கேட்ட போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இளையராஜா சார் இனிமையாக டியூன் போட்டிருந்தார். மணிரத்னம் சாரின் சொந்தப் படமான 'சத்ரியன்' படத்தில் வரும் இந்தப் பாடலை, நான் பாடல் டிராக்கில் மட்டும் தனியாக பாடவில்லை. மொத்த ஆர்க்கெஸ்ட்ராவோடும் சேர்ந்துதான் என் பாடலும் ரெக்கார்டிங் ஆனது. 1990-ல் பாடிய இந்தப் பாடலை இன்று வரைக்கும் ரசிகர்கள் மறக்கவில்லை. நான் போகும் கச்சேரிகளில் எல்லாம் கட்டாயம் என்னை இந்தப் பாடலையும் பாடச் சொல்வார்கள்.

4 comments:

வடுவூர் குமார் said...

மெய்மறந்து கேட்கச்சொல்லும் பாடல் இது.
என்னங்க? ரொம்ப நாட்களாக இந்த பக்கம் காணவில்லை?

வவ்வால் said...

ஆஹா இந்த பாடல் சத்திரியனில் வந்ததா, அந்த படத்தில் கூட இப்படிப்பட்ட நல்ல பாடல்கள் இருக்கும் என நினைக்கவில்லை.அந்த படத்தைப்பார்க்கவில்லை ,ஆனால் இந்த பாடலை அடிக்கடி ரேடியோவில் கேட்டுள்ளேன். நல்லப்பாடலை எடுத்து தந்தமைக்கு நன்றி!

Chandravathanaa said...

வடுவூர் குமார்
அக்கறையான விசாரிப்புக்கு நன்றி.
வருவேன்.

வவ்வால் நானும் ஆச்சரியப் பட்டேன்.
அருமையான பாடல்

Unknown said...

mam please enakku swarnalatha mam email id kodunga pls pls pls pls my id is kpbalakumar1988@gmail.com