படம் - ஒரு நாள் ஒரு கனவு
இசை - இளையராஜா
பாடியவர்கள் - Hariharan, Shreya Ghosal, Pavatharani, Illayaraja, Sadhana Sargam
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்கு ஆ..
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன்தானே
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்றே
அதக்கேற்ற லயம் எந்தன் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்
திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ...
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து
2 comments:
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலை உருவாக்கும் விதத்தில் இளையராஜாவும், வாலியும் பேசியபடி செய்யும் அந்த கம்போஸிங் கூட இனிமையாக இருக்கும்.
//இசையில் பயனே இறைவன் தானே//
//அன்னை அன்றே//
//தந்தை அன்பே//
"இசையின் பயனே", "அன்னை என்பேன்", "தந்தை என்பேன்"
என்றுதான் வருமென்று நினைக்கிறேன்
ஆஹா அருமையான இசைப்பாடல்கள் கேட்க மிக்க மகிழ்ச்சி!
தங்களது வலைப்பூவிற்கு என் வலை பதிவிலும் தொடுப்பு கொடுத்திருக்கிறேன் பலருக்கும் உபயோகப்படும் வகையில்.
Post a Comment