12.10.06

எண்ணப்பறவை சிறகடித்து விண்ணில்...

படம்: கார்த்திகை தீபம்
பாடியவர்: பி சுசீலா
பாடியவர்:T.M.சௌந்தரராஜன்
இசை: R.சுதர்சனம்
பாடலாசிரியர்:ஆலங்குடி சோமு


எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
எண்ணப்பறவை சிறகடித்து
விண்ணில் பறக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..
உன் இமைகளிலே உறக்கம் வர
கண்கள் மறுக்கின்றதா..

தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
தென்றல் பாடும் தாலாட்டில் நீ
இன்பம் பெறவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..
இரவு தீர்ந்திடும்வரையில் விழித்திருந்தாலே
துன்பம் வரவில்லையா..

உன்துயர் கண்டால் என்னுயிர் இங்கே
துடிப்பது தெரியல்லையா..
உண்மையறிந்தும் உள்ளம் வருந்த
நடப்பது தவறில்லையா..

(எண்ணப்பறவை)

ஊஞ்சலைப்போலே பூங்கரம் நீட்டி
அருகில் நெருங்கிடவா..
உன்னை உரிமையினாலே குழந்தையைப் போலே
அள்ளி அணைத்திடவா..

அன்னையைப்போலே உன்னுடல் தன்னை
வருடி கொடுத்திடவா..
நீ அமைதியுடன் துயில் கொள்ளும்
அழகை ரசித்திடவா..

(எண்ணப்பறவை)

6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரவதனா!
இது கண்ணதாசன் பாடலாக இருக்கல்லாம்; ஜெயசங்கர் நடித்த தென நினைக்கிறேன்; ஒரு காலத்தில் இலங்கை வானொலியை நிறைத்த பாடல். கேட்கப் பிடிக்கும்
யோகன் பாரிஸ்

கானா பிரபா said...

எனக்கு பழைய பாடல்களில் அதீத ஈர்ப்பு ஏற்பட இந்தப்பாடல் கூட உதவியிருக்கின்றது. பாடல்வரிகளை நீங்கள் தந்தது மேலும் சிறப்பு. வரிகளைப்பார்த்தால் யோகன் அண்ணா சொல்வது போல் கண்ணதாசனின் தத்துவமுத்திரை தான் இருக்கின்றது.

abey said...

இப்பாடலும் அந்தக் காட்சியும் பல காலமானாலும் என் மனதில் அழிக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றது.
காட்சியில் அசோகன் தன் சுகவீனமுற்ற மனைவிக்காக நெகிழ்ந்து பாடி மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்

gvbala director said...

Kathalithavargalukkellaam இந்த பாடல் இனிய அனுபவம் கொடுக்கும்..காதலில் தோற்றவர்களுக்கு எல்லாம் இந்த பாடல் காதல் நினைவுகளை அள்ளிக்கொடுக்கும்...

Srinivasa Prasad said...

இப்பாடல் ஆலங்குடி சோமு எழுதியது... கண்ணதாசன் அல்ல.

Chandravathanaa said...

மிக்க நன்றி பிரசாத்.
திருத்தி விட்டேன்.