படம் : சித்தி
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : M.S.V
நடிகை : பத்மினி
பாடல் ஒலிவடிவில்
பெண்ணாகப் பிறந்தவர்க்கு
கண்ணுறக்கம் இரண்டு முறை
பிறப்பில் ஒரு தூக்கம்
இறப்பில் ஒரு தூக்கம்
இப்போது விட்டு விட்டால்
எப்போதும் தூக்கம் இல்லை
என்னரிய கண்மணியே
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
காலமிது காலமிது
கண்ணுறங்கு மகளே
காலமிதைத் தவற விட்டால்
தூக்கமில்லை மகளே
தூக்கமில்லை மகளே
நாலு வயதான பின்னே
பள்ளி விளையாடல்
நாள் முழுதும் பாடச் சொல்லும்
தெள்ளுதமிழ்ப் பாடல்
எண்ணிரண்டு வயது வந்தால்
கண்ணுறக்கம் இல்லையடி
ஈரேழு மொழிகளுடன்
போராடச் சொல்லுமடி
தீராத தொல்லையடி
(காலமிது)
மாறும்..
கன்னி மனம் மாறும்
கண்ணன் முகம் தேடும்
ஏக்கம் வரும்போது
தூக்கம் என்பதேது
தான் நினைத்த காதலனை
சேர வரும்போது
தந்தை அதை மறுத்து விட்டால்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது..
மாலையிட்ட தலைவன் வந்து
சேலை தொடும்போது
மங்கையரின் தேன் நிலவில்
கண்ணுறக்கம் ஏது..
கண்ணுறக்கம் ஏது
(காலமிது)
ஐயிரண்டு திங்களிலும்
பிள்ளை பெறும்போதும்
அன்னை என்று வந்தபின்னும்
கண்ணுறக்கம் போகும்
கண்ணுறக்கம் போகும்
கை நடுங்கிக் கண் மறைந்து
காலம் வந்து சேரும்
காணாத தூக்கமெல்லாம்
தானாகச் சேரும்
தானாகச் சேரும்
(காலமிது)
ஆரிராரிரி ராரிராராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிரி ராரிராரோரோ ஆரிராரிராரோ
6 comments:
சந்திரவதனா!
இப்பாடல் படம் வந்த காலத்திலேயே என் மனதைத் தொட்ட பாடல்; ஒரு பெண் எப்படித் தூக்கம் தன் குடும்பத்திற்காகத் தொலைக்கிறாள். என்பதைக் கண்ணதாசன் அனுபவித்தது போல் எழுதியுள்ளார்.இப்பாடல் கேட்கும் போது அம்மாவை நினைப்பேன். அவள் எங்களுக்காக தன் தூக்கம் தொலைத்தவள். ஏனைய பெண்ணினம் போல்.
சுசிலா சொல்லுணர்ந்து பாட; பத்மினி அற்புதமாக நடித்த பாடல்.
எனக்கு மிகப் பிடித்த பாடல்;.
மிக்க நன்றி
யோகன் பாரிஸ்
நான் நீண்ட தேடிய பல பாடல் வரிகள் உங்கள் வலைப்பதிவில் கிடைத்ததில் மகிழ்ச்சி....நன்றி!!!!
சந்திரவதனா
பெண்களின் வாழ்க்கையையே சித்தரிக்கும் பாடல்
இந்த பாடல் வரிகளுக்காக நீண்ட நாள் காத்திருந்தேன். மிக்க நன்றி
நன்றி. வாழ்த்துக்கள்
சந்தோசம் சந்திரவம்சம்
Post a Comment