படம் : சித்தி
குரல் : T.M.S+சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகர்கள் : ஜெமினி, பத்மினி
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய்ப் பாய்வதென்ன
பெண்மேனி தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன
பொன்மேனி பார்ப்பதென்ன
பூவாடை கொள்வதென்ன
தன்னைத்தான் மறந்ததிலே
தண்ணீரும் சுடுவதென்ன
(பொன்)
அங்கிருந்து ஆடிவந்து
அலைகள் சொல்லும் சேதி என்ன
வெள்ளிக்கெண்டை மீனைப் போலே
துள்ளும் கண்கள் சொல்வதென்ன
துள்ளும் கண்கள் சொல்வதென்ன
சொன்னபின்னும் கேள்வி என்ன
துருவித் துருவிக் கேட்பதென்ன
முன்னும் பின்னும் பார்ப்பதென்ன
முத்தையா உன் வேகமென்ன
முத்தையா உன் வேகமென்ன
(தண்ணீர்)
மாலை வெய்யில் வண்ணம் போலே
மஞ்சள் பூசும் கோலம் என்ன
மஞ்சளோடு சேர்ந்து எந்தன்
நெஞ்சம் போடும் தாளம் என்ன
நெஞ்சம் போடும் தாளம் என்ன
அந்தி சாயும் நேரம் வந்தும்
மிஞ்சி மிஞ்சிப் போவதென்ன
அந்த நாளைக் காணும் முன்னே
அம்மம்மா ஏக்கமென்ன
அம்மம்மா ஏக்கமென்ன
(தண்ணீர்)
5 comments:
சந்திரவதனா!!
இப் படத்தில்; இந்தப் பாட்டுப் பிரபலம்; எனினும் எனக்கு "காலமது காலமது கண்ணுறங்கு மகளே" மிகப் பிடித்த பாடல். அத்துடன் எம் ஆர் ராதா அவர்களின் நடிப்பு.கே.எஸ். கோபாலகிருண்ணன் இயக்கம்- அவருக்கு மிக மரியாதையைப் பெற்றுத் தந்த படம்.
யோகன் பாரிஸ்
சந்திரவதனா இந்தப் பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும். அதே போல "சந்திப்போமா சந்திப்போமா தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா" என்ற பாடலும் மிகவும் பிடிக்கும்.
யோகன் ஐயா குறிப்பிட்ட காலமிது காலமிது பாடலும் மிகச்சிறப்பு.
யோகன்
தண்ணீர் சுடுவதென்ன... பாடல் கவர்ச்சியான பாடல். பலரது மனதையும் கவர்ந்த பாடல். கேட்பதற்கும் இனிமையானதுதான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.. மிக அருமையான பாடல். கேட்கக் கேட்கத் திகட்டாத மனதை நீவி விடுவது போல அமைந்த பாடல்.
இன்று அந்தப் பாடலைப் போட்டதும் நதி அப்படியே என் நெஞ்சில் சாய்ந்து பாடலை ரசிக்கத் தொடங்கி விட்டாள். அவள் முகத்தில் ஒரு அமைதியும், சந்தோசமும் அந்தப் பொழுதில் தெரிந்தது. இரண்டாவது தரம் பாடலைப் போட்ட போது தானும் சேர்ந்து பாடிக் கொண்டு அப்படியே நித்திரையாகினாள். மிகவும் இதமான பாடல்.
உங்களுக்காக அந்தப் பாடல் - காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே...
றாகவன்
சந்திப்போமா இன்று சந்திப்போமா... என்ற பாட்டும் அழகான பாடல்தான். முன்னர் இப்பாடல் காதலர்களிடையே பிரபல்யமாக இருந்தது. இளைஞர்களின் குறும்புக்கும் பெண்களிடம் சேஷ்டை செய்வதற்கும் கூட இப்பாடல் உதவியது.
சந்திரவதனா!
ஏதோ உங்க தயவில நல்ல பழையபாடல்கள மனதில் பாட முடிகிறது. நன்றி!
அது வேறொன்றுமில்லை. ராகவன் இப்போ அடிக்கடி சந்திப்போமா .. பாடுகிறார் போல்தான் தெரிகிறது.
பாடலை மட்டுந்தான் சொன்னேன் ராகவன் :))
Post a Comment