27.9.06

காவேரி ஓரம் கவி சொன்ன காதல்

படம் : ஆடிப்பெருக்கு
குரல் : சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
நடிகை : சரோஜாதேவி


காவேரி ஓரம் கவி சொன்ன காதல்
கதை சொல்லி நான் பாடவா - உள்ளம்
அலை மோதும் நிலை கூறவா
அந்த கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

பொருளோடு வாழ்வு உருவாகும்போது
புகழ் பாட பலர் கூடுவார் - அந்த
புகழ் போதையாலே எளியோரின் வாழ்வை
மதியாமல் உரையாடுவார் - வீணில்
விதியோடு விளையாடுவார் - அன்பை
மலைவாக எடை போடுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்
என்ற கனிவான பாடல் முடிவாகும் முன்னே
கனவான கதை கூறவா - பொங்கும்
விழி நீரை அணை போடவா

(காவேரி)

4 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

"அழியாது காதல் நிலையானதென்று
அழகான கவி பாடுவார் - வாழ்வில்
வளமான மங்கை பொருளோடு வந்தால்
மனம் மாறி உறவாடுவார் - கொஞ்சும்
மொழி பேசி வலை வீசுவார் - நட்பை
எளிதாக விலை பேசுவார்"

சந்திரவதனா!
இந்தக் கண்ணதாசன் வரிகளுக்குப் பெருமை சேர்க்க இன்றும் பலர் கங்கணம் கட்டுவது. கண்கூடு. ஆழமான பாடல், இனிய குரல்; சோகரசம் ததும்பும் இசை; கேட்கப்பிடிக்கும்;
யோகன் பாரிஸ்

ஞானவெட்டியான் said...

வழக்கம்போல் பாடலைக் கேட்க
http://iniyavaikal.blogspot.com/2006/09/13.html

சின்னக்குட்டி said...

வணக்கம் சந்திரவதனா... இந்த படம் ஜெமினி நடிச்ச படமென்று நினைக்கிறன்...

எழுத்தாளர் ரஞ்குமாரின் பதிவில் நீண்ட பின்னூட்டம் இட்டீர்கள் மிக்க நன்றி... அந்த பின்னூட்டங்கள் பப்ளிஸ் பண்ணீவிட்டேன்.. ஏனோ தமிழ் மணத்தில் வரமறுக்கிறது... சரி வந்த பின் எனது இணைப்பில் பதில் போடுகிறேன்

Chandravathanaa said...

யோகன், ஞானவெட்டியான், சின்னக்குட்டி
தகவல்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி