படம் : பட்டணத்தில் பூதம்
குரல் : T.M.S., சுசீலா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை :M.S.V.
நடிகர்கள் : ஜெய்சங்கர்+கே.ஆர்.விஜயா
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்
இல்லாமல் தோகை ஏதடி
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...
கண்கள் சரவணன் சூடிடும் மாலை
கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை
பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே
வேலை வணங்காமல் வேறென்ன வேலை
நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே
நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று
நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்
கண்ணில் நின்றாடச் சொல்லடி
மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்
மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்
நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ
நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ
காலம் மாறினால் காதலும் மாறுமோ
மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்
மாறாது மாறாது இறைவன் ஆணை
இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்
சேரும் நாள் பார்ப்பதென்னடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை
இல்லாமல் வேலன் ஏதடி...
ஆ......ஆ......ஆஆஆஆ
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
அந்த சிவகாமி மகனிடம்...
சேதி சொல்லடி... என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....
7 comments:
சந்திரவதனா
உங்கள் பதிவுகளில் வரும் நிறைய பாடல்கள் என் மனதுக்குள்ளும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த பாடல் என் சகோதரன் பாட கேட்க எனக்கு பிடிக்கும். TMS சுசீலாவின் நல்ல பாடல்களில் ஒன்று.
கண்ணதாசன்+விஸ்வநாதன்+சௌந்தரராஜன்+சுசிலா; கூட்டில் வந்த நல்ல இனிமையான;முருகனை வர்ணிக்கும் பாடல்; அத்தனை அடிகளும் சிறப்பானவை. இப்பாடலில் "சிவகாமி மகன்" என்பது முருகனை மாத்திரமல்ல; காமராஜரையும் குறித்து; திமுகவிலிருந்து; காங்கிரசுக்குப் போக நினைத்த கவிஞர்; எழுதிய வரிகள் எனவும்; கூறுவார்கள்; எது எப்படியோ???? எமக்கு ஓர் இனிய காலத்தால் அழியாத பாடல்.
யோகன் பாரிஸ்
//
இனிய காலத்தால் அழியாத பாடல்.
//
மிகச் சரியான கருத்து !
காலத்தான் அழியாத காவியப் பாடல். கண்ணதாசன் முருகனையும் காமராஜரையும் வைத்து எழுதிய சிலேடைப் பாடல் இது.
இந்தப் பாடலுக்கு இசை கோவர்த்தனம். இவர் ஒன்றிரண்டு படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். மெல்லிசை மன்னரிடம் உதவியாளராகவும் பணியாற்றியிருகிறார்.
காங்கிரஸ், காங்கிரஸ்[ஸ்தாபனம்] காங்கிரஸ் [இந்திரா] என இரு பிரிவுகளாகப் பிரிந்தது. கவிஞர் இந்திரா காங்கிரஸில் சேர்ந்து விட்டார்.
பிற்காலத்தில் தமிழ்நாட்டில் இரு பிரிவுகளையும்
இனைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்
பட்டன. அச்சமயத்தில் எழுதப் பட்ட பாடல் இது.
பத்மா, யோகன், பாலா, றாகவன், மாசிலா, சிவஞானம்
உங்கள் கருத்துக்களுக்கும் தகவல்களுக்கும் மிகவும். நன்றி.
யோகன், றாகவன், சிவஞானம்
எனக்குத் தெரியா தகவல்களையும் தந்துள்ளீர்கள்.
மாசிலா
ஒரு சில பாடல்களை படித்தும் பாடியும் பார்க்கையில், ஒரு கனம் என்னையே நான் மறந்துவிட்டேன். என்ன ஒரு மாயம் பார்த்தீர்களா!
உண்மை மாசிலா. பாடல்களுக்கு இருக்கும் சக்தி அதிகம்.
எமது உணர்வுகளை மிகவும் சந்தோசமாக்கி விடும் வல்லமை அவைக்குண்டு.
இந்த பாடலின் பண்ணிசைச் சாயல் பீலு. பூவும் பொட்டும் படத்தில் வரும் நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகிறான் என்ற பாடலும் பீலு பண்ணிசை என்கிறார் ஒரு இசையார்வலர். நான் அதிகம் அறியாத பண் இது.
Post a Comment