படம்: அருணோதயம்
பாடியவர்: T.M.சௌந்தரராஜன்
இசை: K.V.மகாதேவன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
உனக்கு நீதான் நீதிபதி..
மனிதன் எதையோ பேசட்டுமே..
மனசை பார்த்துக்க நல்லபடி உன்
மனசை பார்த்துக்க நல்லபடி..
(உலகம் ஆயிரம்)
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..
கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..
குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..
குணத்துக்கு தேவை மனசாட்சி..
(உலகம் ஆயிரம்)
மயிலைப் பார்த்து கரடியென்பான்..
மானைப் பார்த்து வேங்கையென்பான்..
குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..
அதையும் சில பேர் உண்மையென்பார்..
யானையைப் பார்த்த குருடனைப் போல்..
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்
என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..
உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..
கடலில் விழுந்த நன்பனுக்கு..
கைகொடுத்தேன் அவன் கரையேற..
கரைக்கு அவனும் வந்து விட்டான்..
கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..
சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..
சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை
சொல்லத்தானே வார்த்தையில்லை..
(உலகம் ஆயிரம்)
13 comments:
இந்தப் பாடலை இதுவரை கேட்டதில்லை. ஆனால் அர்த்தமுள்ள பாடலாக உள்ளது. நன்றி
"கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு"
சந்திரவதனா!
அனுபவவரிகள்!!! கவியரசர் வாக்கு தப்பாது. இன்று ,இன்னும் இவ்வவலம் தொடர்கிறது. ரி.எம்.எஸ்; சிவாஜி பாடலைச் சோபிக்க வைத்தார்கள். கண்ணதாசனின் தத்துவ முத்துக்களில் ஒன்று!
யோகன் பாரிஸ்
"கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்
கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..
காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..
கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு"
சந்திரவதனா!
அனுபவவரிகள்!!! கவியரசர் வாக்கு தப்பாது. இன்று ,இன்னும் இவ்வவலம் தொடர்கிறது. ரி.எம்.எஸ்; சிவாஜி பாடலைச் சோபிக்க வைத்தார்கள். கண்ணதாசனின் தத்துவ முத்துக்களில் ஒன்று!
யோகன் பாரிஸ்
பாரதி
கருத்துக்கு நன்றி.
இந்தப் பாடலை நீங்கள் இதுவரை கேட்டதில்லையா?
அப்படியானால் நீங்கள் மிக இளவயதினராக இருக்க வேண்டும்.
வெளிவந்து பல வருடங்கள் சென்ற பின்னும் பலராலும் விரும்பிக் கேட்கப் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
முன்னர் சந்தேகம் ஊடல் என்பன குறுக்கிட்ட போது காதலர்கள் இடையே பரிமாறப் பட்ட பாடல்களுள் ஒன்றாகவும் இது இருந்தது.
எலிவால்ராஜர்
சிவாஜியின் நடிப்பு மிகையானது என்று பலர் சொல்வார்கள். ஆனாலும் நீங்கள் சொல்வது போல அந்த நேரத்தில் அந்த சோகத்தை அவரால்தான் கொண்டு வர முடிந்தது.
யோகன்
கருத்துக்களுக்கு நன்றி.
அனுபவவரிகள்!!!
நடிகர் திலகத்தை ஞாபகத்திற்கு கொண்டு வந்து விட்டீர்கள்
நன்றி என்னார்.
மறக்க முடியாத கலைஞர்களில் ஒருவர் அல்லவா சிவாஜிகணேசன்.
சந்திராக்கா,
இந்த வலையில் இருக்கும் அனைத்து பாடல்களின் லிஸ்டையும் ஒரு பதிவாக வெளியிட்டு அதனையும் ஒரு சுட்டியாக கொடுக்கலாமே (அல்லது, ஏற்கனவே இருக்கா?).
சீனு
அப்படிச் செய்யலாம் என்று எண்ணித் தொடங்கினேன்.
ஆனால் தொடர இன்னும் நேரம் வரவில்லை.
விரைவில் அனைத்துப் பாடல்களையும் ஒரு பதிவாக்கி சுட்டியையும் கொடுக்கிறேன்.
கருத்துக்கு நன்றி.
குளக்கோடான்
உங்கள் கருத்துக்கு நன்றி
ஆயிரம் ஆஸ்கார்களை கொட்டினாலும்... இந்த நடிப்புக்கு இனை ஆகாது.. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு உலகமகா கலைஞனை இந்திய அரசு அவமதித்து இருக்கிறது...உலகம் அழியும் வரை அவர் புகழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது
ஆயிரம் ஆஸ்கார்களை கொட்டினாலும்... இந்த நடிப்புக்கு இனை ஆகாது.. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒரு உலகமகா கலைஞனை இந்திய அரசு அவமதித்து இருக்கிறது...உலகம் அழியும் வரை அவர் புகழை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது
உலக அதிசயங்களில் நடிகர் திலகத்தின் நடிப்பும் ஒன்று.... அவர் புகழ் வாழ்க..
Post a Comment