11.5.06

நிலவு வந்து பாடுமோ

படம்: இராமன் எத்தனை இராமனடி
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம். எஸ்.விஸ்வனாதன்
வரிகள்: கண்ணதாசன்
நடிகை: கே.ஆர்.விஜயா


நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்

நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபையினிலே
பண்பு கூட மாறினால்...
பண்பு கூட மாறினால்

மாறட்டும்
மனது போல போகட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்
ஆடட்டும்
தனை மறந்து ஆடட்டும்

தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
தலை குனிந்த பெண்களும்
தலை நிமிர்ந்த ஆண்களும்
நிலை குலைந்து போன பின்
நீதி எங்கு வாழுமோ
நீதி எங்கு வாழுமோ

வாழட்டும்
வழி மறந்து வாழட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்
பார்க்கட்டும்
அறிவு கொண்டு பார்க்கட்டும்

அனுபவிக்கும் அவசரம்
ஆடை மாற்றும் அதிசயம்
முடிவில்லாத போதையில்
முகம் மறந்து போகுமோ
முகம் மறந்து போகுமோ

போகட்டும்
புதிய சுகம் காணட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்
காணட்டும்
காலம் வரும் மாறட்டும்

ஊமை கண்ட கனவையும்
உறவு தந்த நினைவையும்
கருவிலுள்ள மழலையும்
உருவம் காட்ட முடியுமோ
உருவம் காட்ட முடியுமோ

முடியட்டும்
முடியும் போது முடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்
விடியட்டும்
விடியும் போது விடியட்டும்

நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ

2 comments:

வல்லிசிம்ஹன் said...

அழகுப் பாடல்.சுசீலாவின் குரல். மனதில் கே.ஆர்.விஜயாவின் உருவம் எல்லாம் எழுகின்றன.நன்றி சந்திரவதனா.

Chandravathanaa said...

மானு, யோகன்
கருத்துக்களுக்கு நன்றி.

அந்த வயதில் இந்தப் பாடலின் போது கதாநாயகியின் மேல் இரக்க ம் வந்தது.