13.3.06

கண்ணில் என்ன கார்காலம்

படம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்
வரிகள் - வைரமுத்து
இசை - இளையராஜா
பாடியவர்கள்-எஸ்.பி.பாலசுப்ரமணியம்+ ஜானகி


பாடல் ஒலி வடிவில் - http://ww.smashits.com/index.cfm?Page=Audio&SubPage=STFListen&TrackID=25317

கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்

மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே

கண்ணில்...

நான் ஏங்கும் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிதையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்

கண்ணில்...

இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்

கண்ணில்...

13 comments:

G.Ragavan said...

மிகவும் மென்மையான பாடலிது. நினைவுறுத்தியமைக்கு நன்றி சந்திரவதனா.

தாணு said...

//விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே//
ரொம்ப பிடிச்ச பாடலின் மிக அதிகமாகப் பிடித்த வரிகள். நன்றி வதனா!

Chandravathanaa said...

நன்றி தாணு.
நன்றி இராகவன்.
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று இது.

கைப்புள்ள said...

அருமையான பாடல்.

படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால்
இசை : இளையராஜா

ரஜினியும், மாதவியும் நடித்த படம் என நினைக்கிறேன்.

பாரதிய நவீன இளவரசன் said...

எனக்குப் பிடித்தப் பாடல்களில் ஒன்று.

ரஜினியும் மாதவியும் புல் தரையில் யதார்த்தமாக நடந்துவர பாலு மகேந்திராவின் இயக்கத்தில், கேமராக் கைவண்ணத்தில் மிக நேர்த்தியாகப் அமைந்த பாடற்காட்சி, கண்ணிற்குக் குளிர்ச்சி. அதே சமயம், இது ஒரு சோகத்தின் இம்சையையும் நம் மனதில் மென்மையாக படரசெய்யும் மெலடிவகைப்பாடல்.

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.

Chandravathanaa said...

வெங்கடேஷ் வரதராஜன்

இந்தக் காட்சியை நான் இன்னும் பார்க்கவில்லை.
பாடலின் இதத்தில் காட்சியைபஇ பார்க்க வேண்டுமென்ற ஆவல் உண்டு.
பல சமயங்களில் பாடல்களின் அழகு காட்சியில் மழுங்கடிக்கப் பட்டு விடுவதுண்டு.
நீங்கள் சொல்வது போல் காட்சியும் நன்று என்றால் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

கைப்புள்ள

தகவல்களுக்கு நன்றி.

ஜெ. ராம்கி said...

Thanks for the post :-)

பாரதிய நவீன இளவரசன் said...

"பல சமயங்களில் பாடல்களின் அழகு காட்சியில் மழுங்கடிக்கப் பட்டு விடுவதுண்டு.."

நீங்கள் சொல்லுவது 100 சதவித உண்மை. அந்த வகையில் இப்பாடல் ஒரு விதிவிலக்கு எனலாம்.

ரஜினியின் இயல்பான நடிப்பும், மேக்கப்புகள் அதிகமில்லாத யதார்த்த மாதிவியும், நந்தவனத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இதமான தென்றலாக இளையராஜாவின் இன்னிசையும் பாடலுக்கு அழகு சேர்க்க, பாலு மகேந்திராவின் காட்சியமைப்போ நம்மை நாமே ஒரு கணம் மறக்கச் செய்கிறது.

அதே சமயம், இன்னோரு விஷயத்தினையும் நான் சொல்லியாக வேண்டும் - ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்துப் படம் பண்ணுகிறோமே, அவருக்கேற்றார் போல் இருக்க வேண்டும் என்றெண்ணி, பல சமாதானங்களைச் செய்ததனால், படம், பாலுமகேந்திரா படம் போலுமல்லாமல், ரஜினி படம் போலுமல்லாமல், இரண்டு வித ரசிகர்களின் மனக்கசப்பிற்கும் உள்ளாகிப் பெருத்த தோல்வியையே தழுவியது (நீங்கள், இந்தப் பாடலுக்காக, VCD/DVDயில் படத்தை வாங்கிப் பார்க்க நேரிட்டால், நீங்கள் படும் அவஸ்த்தைக்கு நான் பொருப்பல்ல:)).

அன்புச் சகோதரன்,
வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.

Chandravathanaa said...

வெங்கடேஷ் வரதராஜன்
தகவல்களுக்கு நன்றி

Chandravathanaa said...

நன்றி சிறீகரன்
இணைத்துள்ளேன்.

ஹரன்பிரசன்னா said...

Lyrics by Vairamuthu

Chandravathanaa said...

நன்றி ஹரன்பிரசன்னா

SAS Hameed said...

கவிஞர் வைரமுத்துவின் சாகா வரம் பெற்ற வைர வரிகள்!
சேயன் ஹமீது