16.2.06

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே

படம் - பாபு

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்
இசை பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்
தளிர்க் கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


பல நூல் படித்து நீயறியும் கல்வி
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே


தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை
தந்து பொழி பொழிந்து உயிர் வளர்க்கும் ஏழை
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன

பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்

இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே

5 comments:

நாகு said...

Palamurai indha paadalai kettu irukkindren... aanaal muzhumaiyaga naan paarthu paadi rasitheen..nandri. vaazhthukkal.

சேரல் said...

Nall paadalkaLai vazangki varukireerkal......
isai rasikarkal saarbaaka nandri...

G.Ragavan said...

திரைப்பாடல்கள் இலக்கியமாகுமா என்று நீண்ட நாட்களாகவே சர்ச்சை இருக்கிறது. எல்லாப் பாடல்களும் ஆகுமா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக இந்தப் பாடல் இலக்கியம் ஆகும். கவியரசரின் வரிகள் மிகவும் அருமை. மெல்லிசை மன்னரின் இசையும் டி.எம்.எஸ்ஸின் குரலும் மிக மிக அருமை. இந்தப் பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி சந்திரவதனா....

Chandravathanaa said...

நாகராஜன், சேரல், ராகவன்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
அருமையான பாடல்தான். படம் வந்த காலத்தில் அனேகமானோரால் உணர்வோடு ரசித்துப் பாடப்பட்ட பாடல்.

Kaviri Maindhan said...

காவியக் கவிஞர் வாலியின் வரிகள்... மறக்கக் கூடாத மாணிக்க வரிகள்.. இன்பம் என்பது வேறெங்கும் இல்லை. இதுபோன்ற பாடல்கள் கேட்பதில்தான் என்று சத்தியம் செய்யலாம். சந்திரவதனா.. நன்றி .. நன்றி.. (உங்களோடு மின்னஞ்சல் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்) kaviri2012@gmail.com - காவிரிமைந்தன் - கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் .. சென்னை..