28.12.05

கண்ணே கலைமானே

படம் மூன்றாம் பிறை
குரல் கே. ஜே. ஜேசுதாஸ்
பாடல் கண்ணதாசன்
இசை இளையராஜா


கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி
நீயோ கிளிப்பேடு..
பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது

கண்ணே கலைமானே.. கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்..
எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி...
நீதானே என் சந்நிதி...

கண்ணே கலைமானே..
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே..
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன்
ஆரிராரோ... ஓராரிராரோ...

6 comments:

- யெஸ்.பாலபாரதி said...

என்ன ஆச்சு உங்களுக்கு...
உங்கள் படைப்புக்களை எதிர்பார்த்து...
வலைத்தளத்திற்கு வந்தால்.. சினிமா பாடலா? ரொம்ப மோசம் நீங்கள்?
உங்களோடு "காய்".
வருத்தமுடன்
தோழன்
பாலா

வசந்தன்(Vasanthan) said...

ஆம்.
கண்ணதாசனின் கடைசித் திரைப்பாடல் இதுதான் (என்றுதான் நான் அறிந்திருக்கிறேன்.)

Anonymous said...

ungal page athanaiyum nandraaga ulladhu. ungal email sollunga.
redvanilla590@yahoo.com

Chandravathanaa said...

பாலபாரதி, ரூபா, வசந்தன், றெட்வெண்ணிலா
உங்கள் அனைவரினதும் வரவுக்கும் பதிவுக்கும் மிகவும் நன்றி.
பாலபாரதி உங்கள் தோழமையுடனான கேள்விக்கு நன்றி.
எனது படைப்புக்களைத் தர முயல்கிறேன்.

கல்லகம் சுரேஷ் குமார் said...

நீங்களும் என்னைப்போல கமல் ரசிகை

Chandravathanaa said...

ஓம் சுரேஷ்,
சரியாககக் கண்டு பிடித்துள்ளீர்கள்: